பூண் உலாவிய - அணிகலன்கள் அசையப் பெற்ற; பொன்கலசங்கள் - பொன் கலசங்களைப் போன்ற (அப் பெண்ணின் கொங்கைகள்; என் ஏண் இல் - பெருமையற்ற எனது; ஆகத்து - மார்பிலே; எழுதல என்னினும் - அழுந்திப் பதியாமல் போயினும்; வாள் நிலா முறுவல் - ஒளியுடைய சந்திரகாந்தி போன்ற புன்சிரிப்பையும்; கனிவாய் - கொவ்வைப் பழம் போன்ற அதரத்தையும் உடைய; மதி - (அவளது முகமாகிய) சந்திரனை; காணல் ஆவது - (மீண்டும்) பார்ப்பதற்கு; ஓர்காலம் - ஒரு காலமேனும்; உண்டாம் கொலோ - உண்டாகுமோ? சீதையைத் தழுவும் கைகூடாவிட்டாலும் அவளது முகதரிசனமானது இன்னொருமுறை கூடினால் போதுமென இராமன் தன் காதல் மிகுதியை வெளியிடுகிறான். முறுவலைக் கண்ட இராமன் அதன் அருகிலுள்ள அதரத்தையும் கண்டு ‘முறுவல் கனிவாய்மதி’ எனக் கூறினான். கலசம். மதி - உவமையாகு பெயர்கள். 143 |