பக்கம் எண் :

394பால காண்டம்  

வேண்டுமோ   -  (என்னைக்  கொல்லக்  கருதுகின்ற  கூற்றுவனுக்கு
இத்தனை கருவிகளும் வேண்டுமோ)
   

சீதையின்     அல்குல்.  கண்.  முலை.  நகை  என்ற  இவற்றுள்
ஒவ்வொன்றும்  என்னை வருத்துகின்றன. ஆனால். இவற்றுள் ஒன்றே
என்னை   வருத்தப்   போதுமே!  என்பது  கருத்து.  ‘பண்டறியேன்
கூற்றென்  பதனை இனியறிந்தேன். பெண்தகையால் பேரமர்க் கட்டு’ -
குறள் 1083.தேர் - உவமையாகு பெயர்.                      144
 

624.‘கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன்.
பொன்னை முன்னிய பூங் கணை மாரியால்.
என்னை எய்து தொலைக்கும் என்றால். இனி.
வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே?
 

கன்னல்   வார்சிலை  -  கரும்பாகிய  நீண்ட  வில்லை;  கால்
வளைத்தே 
- வளைத்து; மதன் - மன்மதன்; பொன்னை முன்னிய -
திருமகள்  போன்ற  சீதையை  நினைக்கும்  பொருட்டு;  பூங் கணை
மாரியால் எய்து
- (என்மேல்) தொடுக்கும் மலரம்பு மழையால் எய்து;
என்னை
-  (யார்க்கும்  வலி  தொலையாத) என்னை; தொலைக்கும்
என்றால்
-  வலியழிப்பான்  என்றால்;  இனி  - இனிமேல்; வன்மை
என்னும்  இது  
- வலிமை என்று சொல்லப்படுகின்ற குணம்; யாரிடை
வைகும்
- யாரிடத்திலே தங்கியிருக்கும்.    

முன்னிய     - செய்யிய என்னும் வினையெச்சம். இதுவரை வலிய
வில்லம்புகளோடு  கட்டமைந்த  உடம்புமுடைய  வீரர் யார்க்கும் வலி
தொலையாத  நான்  இப்பொழுது மெல்லிய கரும்பு வில்லையும்  மலர்
அம்புகளையும்   உடைய    மன்மதனிடம்   வலிமை    இழக்கும்படி
ஆயிற்றே என்று இராமன் வருந்தினான்.                      145
   

625.‘கொள்ளை கொள்ளக் கொதித்து எழு பாற்கடல்
பள்ள வெள்ளம் எனப் படரும் நிலா.
உள்ள உள்ள உயிரைத் துருவிட.
வெள்ளை வண்ண விடமும் உண்டாம்கொலோ?
 

கொள்ளை     கொள்ள -  (உலக  முழுவதையும்)  கொள்ளை
கொள்வதற்கு;  கொதித்து  எழு -  பொங்கி  எழுகின்ற;  பாற்கடல்
பள்ளம்
- ஆழமான பாற்கடலினது;  வெள்ளம்  என  -  வெள்ளம்
போல;  படரும்  நிலா - பரவியுள்ள நிலாவானது; உள்ள உள்ள -
நான் (அந்த  நங்கையை)  நினைப்பதனால்  தரித்துள்ள;  உயிரை -
என்  உயிரை; துருவிட -  அரிப்பதால்;   வெள்ளை  வண்ணம் -
வெண்மை நிறமுள்ள;  விடமும் - ஒரு நஞ்சும்; உண்டாம் கொல் -
லகில் உள்ளதோ?
    

கொள்ளை கொள்ளுதல்: ஒருங்கே கவர்ந்து தன்வசமாக்குதல். நஞ்சு
கரிய  நிறமுடையது  என்று  கூறுவது  மரபு. ஆனால்.  நிலா என்னும்
வெள்ளை