பக்கம் எண் :

  கார்முகப் படலம்437

செம் மன்னர் புகழ் வேட்ட
 
   பொருளேபோல் தேய்ந்ததால்;
பொம்மென்ன வண்டு அலம்பும்
 
   புரி குழலைக் காதலித்த
அம் மன்னர் சேனை. தமது
 
   ஆசைபோல் ஆயிற்றால்.
 

இம் மன்னன்- இந்தச் சனகனது; பெருஞ்சேனை - பெரிய படை;
ஈவதனை மேற்கொண்ட
- (இடைவிடாது புரிந்த போரினால்) கொடைத்
தொழிலை  மேற்கொண்டுள்ள;  செம்மன்னர்  -  நீதியுள்ள அரசரின்;
புகழ்வேட்ட
-  புகழையே  விரும்பிய; பொருளே போல் - செல்வம்
போல; தேய்ந்தது  -  வரவரக்  குறையலாயிற்று;  பொம்மென்ன  -
(ஆயினும்)  ‘பொம்’  என்னும்  ஒலியுண்டாக;  வண்டு  அலம்பும்  -
வண்டுகள்  ஒலிக்கப்  பெற்றதும்;  புரிகுழலை - கடை  குழன்றதுமான
கூந்தலையுடைய  சீதையை;  காதலித்த  -  விரும்பிய; அம்  மன்னர்
சேனை  
- (பகை) அரசர்களின் சேனை; தமது ஆசை போல் - தமது
ஆசை போல; ஆயிற்று - பெருகிற்று.  

வேந்தர்   பலர் கூடி இடைவிடாது செய்த போர்களாதலால் தனித்து
நின்ற  சனகனது  படை  சுருங்கியது.  பகைவர்  சேனைகள்  பெருகின
என்பது.                                                  22
   

688.‘மல் காக்கும் மணிப் புயத்து
   மன்னன் இவன். மழவிடையோன்
வில் காக்கும் வாள் அமருள்
   மெலிகின்றான் என இரங்கி.
எல் காக்கும் முடி விண்ணோர்
   படை ஈந்தார் என. வேந்தர்.
அல் காக்கை கூகையைக் கண்டு
   அஞ்சினவாம் என. அகன்றார்.

 
  

எல்காக்கும்    முடி- ஒளிவிடும்  முடியணிந்த;  விண்ணோர் -
தேவர்கள்; மல் காக்கும் - வலிமை பெற்ற; மணிப் புயத்து - அழகிய
தோள்களைக்  கொண்ட;  மன்னன்  இவன்  -  இந்தச் சனகன்; மழ
விடையோன்  வில்  
-  காளை  ஊர்தியை உடைய சிவனது வில்லை;
காக்கும்  வாள்  அமருள்  
-  காப்பதற்காகச்  செய்யப்படும் கொடிய
போரில்;  மெலிகின்றான்  -  வரவரத்  தளர்ச்சியடைகின்றான்; என-
என்ற   காரணத்தினால்;   இரங்கி  -  இரக்கம்  கொண்டு; படை  -
நால்வகைப்   படைகளை;   ஈந்தார்   என  -  அளித்து உதவினார்
என்பதால்; வேந்தர்  -  பகையரசர்;  அல்  -  இரவில்;  காக்கை -
காக்கைகள்;