அன்று முதல் இன்றளவும்- அன்று முதல் இன்று வரை; ஆரும்- எந்த அரசனும்; இந்தச் சிலை அருகு - இந்தச் சிவவில்லின் பக்கத்தில்; சென்றும் இலர் - சென்றதும் இல்லை; போய் ஒளித்த - ஓடி ஒளிந்து கொண்ட; தேர்வேந்தர் - தேர்வீரரான மன்னவர்; திரிந்தும் சிலர் - திரும்பி வரவுமில்லை; இனி- இனிமேல்; என்றும் - (சீதைக்கு) எப்பொழுதும்; மணமும் இல்லை - திருமணம் நிகழாது; என்று இருந்தேம் - என்று கருதியிருந்தோம்; இவன் ஏற்றின்- இந்த இராமன் (இச்சிவதனுசை) நாணேற்றினால்; நன்று - நல்லதாகும்; மலர்க்குழல் சீதை - (அப்போது) மலரணிந்த கூந்தலையுடைய சீதையின்; நலம் - கன்னிமை அழகும்; பழுது ஆகாது - வீணாகாது; என்றான் - என்று கூறி முடித்தான். இராமன் வில்லை நாணேற்றி வளைத்தால் சீதை இடர்க்கடல் நீங்கும் என்பது. முன்பு சனகன் கூறியதை இப்பொழுது சதானந்தனும் கூறி முடித்தான். 24 |