கரங்கள் குவித்து- (சில மாதர் தம் வழிபடு தெய்வங்களை நினைந்து) தம் கைகளைக் கூப்பிக் கொண்டு; இருங்களிறு - ஆண்யானை போன்ற இக்குமரன்; இச் சிலை - இந்த வில்லை; இரு கண்கள் பனிப்ப - எங்களுடைய இரு கண்களும் ஆனந்தக் கண்ணீர் சொரியுமாறு; ஏற்றிலன் ஆயின் - நாண் ஏற்றாமல் போவானேயானால்; நரந்தம் நறை - கஸ்தூரி மணம் கமழும்; குழல் நங்கையும் - கூந்தலையுடைய சீதையும்; நாமும் - நாமும்; முருங்கு எரியில்- எரிக்கும் நெருப்பில்; புக - அழுந்தி; மூழ்குதும் - மூழ்குவோம்; என்பார் - என்று சொல்வார்கள். ‘இக் குமரன் வில் இறுக்காவிட்டால் சீதை கன்னியாகவே இறக்கவேண்டிவரும். அதைவிட நெருப்பில் பாய்ந்து உயிர் விடுதலே மேலானது. நம் அன்பான தோழி அவ்வாறு செய்தால் நாமும் அவளோடு எரிபுகுந்து இறப்போம்’ என்றார் சில பெண்கள். நரந்தம் - கத்தூரி ‘நரந்தம் அரைப்ப நறுஞ்சாந்து மறுக’ - மதுரைக் காஞ்சி. 553. 29 |