பக்கம் எண் :

442பால காண்டம்  

கொடுப்பதை   விட்டு;  வெள்ளம் அணைத்தவன் - கங்கையைத் தன்
சடையிலே  தாங்கிய  சிவனது;  வில்லை  எடுத்து - வில்லை எடுத்து
வந்து; இப் பிள்ளைமுன் இட்டது - (அதை நாணேற்றி வளைக்குமாறு)
இந்தக் குமரன் முன்னே வைத்தது; பேதைமை என்பார் - அறிவீனமே
என்று சொல்வார் சிலர் (மாதர்).

சீதையின்   மணத்தை முடிக்க வேண்டுமென்ற எண்ணம் சனகனுக்கு
இருந்திருந்தால்  தக்க  வரன் வந்தபோது அவளை அவனுக்கு மணம்
முடிக்க  வேண்டும்.  அதைவிட்டுச்  சிவவில்லை வளைக்க வேண்டும்
என்பது   முறையற்றது.   இதனால்  ஒன்று  அவனுக்குச்  சீதையின்
திருமணத்தில்  விருப்பம்  இல்லாதிருக்க வேண்டும். அல்லது. அவன்
அறிவற்ற மூடனாக இருக்கவேண்டும்.

வள்ளல்  -   இராமனைக்   குறிப்பதாகக்   கொண்டும்   பொருள்
கூறலாம்.                                                 30
 

696.‘ஞான முனிக்கு ஒரு நாண் இலை’ என்பார்;
‘கோன் இவனின் கொடியோன் இலை’ என்பார்;
‘மானவன் இச் சிலை கால் வளையானேல்.
பீன தனத்தவள் பேறு இலள்’ என்பார்.

 

ஞான  முனிக்கு- தத்துவ ஞானியான   விசுவாமித்திரனுக்கு; ஒரு
நாண்  இலை  
-  சிறிதும்  நாணமில்லை;(உலகத்தவர் நம்மைப் பற்றி
என்ன  நினைப்பார்களோ  என்ற  எண்ணம் சிறிதும் இல்லாமல்   இப்
பெரிய  வில்லை இச் சிறியவனை நாணேற்றுமாறு செய்தான்);  என்பார்
-  என்று  சில  மாதர்  கூறுவர்;  கோன்  இவனின்  - (இச் சிறுனை
வில்லை   வளைக்குமாறு   கூறிய)   இந்த  அரசனைக்    காட்டிலும்;
கொடியோன்  
- கொடியன் ஒருவன்; இலை என்பார்- இல்லை என்று
சொல்வார்கள்  (சில  மாதர்);  மானவன் - வீரனாகிய இந்தக்  குமரன்;
இச்  சிலை  
-  இச்  சிவ  தனுசை;  கால்  வளையானேல் -  இரு
முனைகளையும்  வளைக்கா விட்டால்;(அப்போது); பீன தனத்தவள் -
பருத்த  கொங்கைகளுள்ள  இச்  சீதை;  பேறு  இலள்  -  திருமண
வாழ்க்கையை  இழந்தவளாவாள்;  என்பார்  -  என்று  கூறுவர் (சில
மாதர்).

ஞான  முனி   -   உலக   நடை  அறியாதவன்  என்பது  குறிப்பு.
மானம்-பெருமை. வீரம். பீனம் - பருமை.                       31

                       வில்லினை எடுத்து இராமன் நாண் ஏற்றலும்
                    வில்லொடிந்த ஓசையை அனைவரும் கேட்டலும்
 

697.தோகையர் இன்னன சொல்லிட. நல்லோர்
ஓகை விளம்பிட. உம்பர் உவப்ப.
மாக மடங்கலும். மால் விடையும். பொன்
நாகமும். நாகமும். நாண நடந்தான்.