பக்கம் எண் :

  கார்முகப் படலம்443

தோகையர்   - மயிலைப் போன்ற மகளிர்; இன்னன சொல்லிட -
இவை  போன்றவற்றைச்  சொல்லிக்கொண்டிருக்கும்போது; நல்லோர் -
நல்லோரான   முனிவர்கள்;  ஓகை   விளம்பிட  -  நல்வாழ்த்துக்கள்
கூறவும்;  மாகம்  அடங்கலும் -  வானுலகம்  முழுவதிலுமாக; உம்பர்
உவப்ப
- தேவர்கள் மகிழ்ச்சியடையவும்; மால் விடையும் - (இராமன்)
பெரிய  காளையும்;  பொன்  நாகமும் - பொன் மலையான மேருவும்;
நாகமும் நாண
- யானையும் வெட்கம் அடையுமாறு; நடந்தான் - (வில்
இருக்கும் இடம்) சென்றான்.

இராமன்     நடக்கும்போது  அவனது    பெருந்தோற்றம்   கண்டு
மேருமலையும்.   இவனைப்  போல  மிடுக்கோடு  நடக்க    முடியாமை
பற்றிக்   காளையும்  யானையும்  நாணின  என்பது.    நாகம்-  மலை.
யானை.                                                   32
   

698.ஆடக மால் வரை அன்னதுதன்னை.
‘தேட அரு மா மணி. சீதை எனும் பொன்
சூடக வால் வளை. சூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இது’ என்ன. எடுத்தான்.
 

மால்ஆடகம் வரை- பெரிய பொன் மலையை; அன்னது தன்னை
-  ஒத்தாகிய  அச்சிவ வில்லை; தேட அரு - தேடுதற்கரிய; மாமணி -
சிறந்த    இரத்திரனம்   போன்றவளும்;   சீதை   எனும்   -  சீதை
எனுப்படுபவளுமான;  பொன்சூடகம் - பொன்னாலாகிய  சூடகம் என்ற;
வால்வளை  சூட்டிட  
- கை வளையலையணிந்த  நங்கைக்குச் சூட்டும்
பொருட்டு;  நீட்டும் - நீட்டுதற்கு உரிய; ஏடு அவிழ்மாலை - மலர்ந்த
பூமாலையே;  என்ன  -  என்று எண்ணுமாறு; எடுத்தான் - எளிதாகத்
தூக்கி எடுத்தான்.  

சிவதனுசை     இராமன்  எடுத்தது    சீதையை      மணத்தற்குக்
காரணமாவதால்  அதைச்  சீதைக்குச்  சூட்டுதற்காக   நீட்டும்   மாலை
போலும் என்றார்.                                          33
 

699.தடுத்து இமையாமல் இருந்தவர். தாளில்
மடுத்ததும். நாண் நுதி வைத்ததும். நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்.
 

தடுத்து   இமையால்- கண் கொட்டுவதைத் தடுத்து இமையாதபடி;
இருந்தவர்   யாரும்  
-  (நிகழ்வதை)  பார்த்து  நின்ற  அவையோர்
யாவரும்;  தாளில்   மடுத்ததும்   -  (இராமன்)  தன்  திருவடியால்
அவ்வில்லின் முனையை  மிதித்ததையும்;  நாண்  துதி வைத்ததும் -
(அதை  வளைத்து)  மற்ற முனையில் நாண் ஏற்றியதையும்; கடுப்பினில்
-   (செயலின்)   வேகத்தால்;  நோக்கார்  -  காணமுடியாதவராயினர்;
அறிந்திலர்
- அன்றியும் மனத்தாலும் இன்னது தான்