(அந்நகர மக்களில் சிலர்); தயரதன் புதல்வன் என்பார் - (இவன்) தயரதன் திருமகன் என்று கூறுவார்கள்; தாமரைக் கண்ணன் என்பார் - (சிலர் இவன்) செந்தாமரைக் கண்ணனான திருமாலே என்று சொல்வார்கள்; இவன் மேனி - (சிலர்) இவனது மேனியின் நிறம்; புயல் என்பார் - கருமேகம் என்பார்கள்; பூவையும் பொருவும் - (தவிர) காயாம் பூவையும் ஒத்துள்ளது; என்பார் - என்பார்கள் (சிலர்); மானிடன் அல்லன் - (எவ்வாறாயினும் இவன்) மானுடன் அல்லன்; என்பார் - என்று கூறுவார்கள் (சிலர்); கயல் பொரு கடலுள்- (பின்னை இவன் யாரென்றால்) கயல்மீன்களையுடைய பாற்கடலில்; வைகும் கடவுளே - தங்கியுள்ள திருமாலே ஆவான்; என்பர் - என்று சொல்வார்கள்; மயல் உடைத்து உலகம் - இந்த உலகத்தின் இயல்பு மயக்கம் உடையது; என்பார் - என்று கூறுவார்கள் (சிலர்) (இவ்வாறு மக்கள் பலபடி கூறினர்). பூவையும் - இறந்தது தழீஇய எச்ச உம்மை. 42 |