ஊசல் ஆடு- (சீதை) ஊஞ்சல் போலப் போவதும் வருவதுமான; உயிரினோடும் - உயிருடன்; உருகு பூம்பள்ளி நீங்கி - உடம்பு உருகுவதற்குக் காரணமான மலர்ப் படுக்கையை விட்டு நீங்கி; பாசிழை மகளிர் - பசும்பொன் அணிகள் பூண்ட மகளிர்; சூழப் போய் - சூழ்ந்து வர (அவ்விடத்தை விட்டுப்) போய்; காசு இல் தாமரையின் - குற்றமற்ற தாமரைத்; பொய்கை - தடாகத்தின் கரையிலுள்ள; ஒரு பளிங்குமாடம் - பளிங்கு மாடத்தில்; சந்திரகாந்தம் ஈன்ற - சந்திரகாந்தக் கற்கள் வெளிப்படுத்துவதும்; சீதம் நீர் தெளித்த - குளிர்ந்துள்ளதுமான நீர் தெளித்த; மென்பூஞ் சேக்கையை - மென்மையான பூம்படுக்கையை; அரிதின் சேர்ந்தாள் - அரிதிலே சேர்ந்தாள். சீதை முன்னிருந்த மலர்ப் படுக்கையை விட்டுத் தாமரைத் தடாகத்தின் கரையிலிருக்கும் பளிங்கு மாடத்தில் அமைத்துள்ள. சந்திரகாந்தக் கற்கள் வெளிக்கக்கும் குளிர்ந்த நீர் தெளித்த மலர்ப் படுக்கையில் சிரமப்பட்டுச் சேர்ந்தாள் என்றார். சந்திரகாந்தம்: நிலவைக் கண்ட இடத்து நீரைக் கக்குவதொரு கல் தாமரையின் பொய்கைப் பளிக்குமாடம் என இயைபுடுத்தவேண்டும். 45 |