அந்த இராமனது தோளின் அழகைக் கண்டு) நாண் உலாவு மேருவோடு - ஆதிசேடனாகிய நாணோடு மேரு மலை போன்ற வில்லுடன்; நாண் உலாவு - (அவ் வில்லின்) நாணில் உலாவுகின்ற; பாணியும் - கையும்; தூண் உலாவு தோளும் - தூண்களை ஒத்த தோள்களும்; வாளி ஊடு - அம்புகள் இடையே; உலாவு தூணியும் - செருகப் பெற்ற அம்பறாத் தூணியும்; வாள் நிலாவின் - ஒளிமிக்க சந்திரனைப் போன்ற; நூல் உலாவு - பூணூல் அலையும்; மாலை மார்பும் - வெற்றிமாலை சூடிய திருமார்பும்; மீளவும் - மறுமுறையும்; காணல் ஆகும் ஆகின் - காணக் கூடுமாயின்; ஆவி - என்னுயிரை; காணல் ஆகும் - நான் காணமுடியும் (அது கூடுமா?). ‘என் ஆவி வில்லும் கையுமாகியும். தூணியும் தோளுமாகியும். பூணூலும் மார்புமாகியும் உள்ளது. அத்தகைய ஆவியைக் காணின் எனது ஆவியைக் கண்டதாகும். அவ்வாறு காணாவிட்டால் உயிர் இழப்பேன்’ என்று சீதை கூறுகிறாள். தூண் உலாவு - உலாவு - உவம உருபு. உலாவ என்பது வெவ்வேறு பொருளில் வந்தது - சொற்பொருள் பின்வருநிலையணி. 47 |