பக்கம் எண் :

  எழுச்சிப் படலம்473

-     மலையைத்   தமன்கு  ஒப்பாகாது என இகழ்ந்து; உயர் கனகத்
தோளினர்     
-     மேம்பட்ட     பொன்னணிகளைப்     பூண்ட
தோள்களையுடையவருமாகிய;   மைந்தர் -  ஆடவர்;  வில்லினர்  -
வில்லை  ஏந்தியவரும்;  வாளினர் - வாளினை ஏந்தியவருமாகி;  மாப்
பிடி புல்லிய
- பெருமை மிக்க பெண் யானையைத் தழுவிய; களிறென
-ஆண்யானையைப்  போல; வல்லியின்  மருங்கினர் - கொடிபோன்ற
இடையை   யுடையவர்களாகிய   தத்தம்   மனைவியரின்;   மருங்கு
போயினார்
- பக்கத்தில் சென்றனர்.

மகளிரின் படைக்குப்  பாதுகாவலாக  அவர்களை  யடுத்து  வில்லும்
வாளும் ஏந்திய மைந்தர் சென்றார் என்பது கருத்து.

மகளிரின்     பக்கத்தே செல்லும் ஆடவர்க்குப்  பெண்யானையைப்
புல்லிய    களிறு    உவமையாயிற்று.    வில்லினர்    வாளினர்   -
முற்றெச்சங்கள்                                             17
 

749.மன்றல் அம் புது மலர் மழையில் சூழ்ந்தெனத்
துன்று இருங் கூந்தலார் முகங்கள் தோன்றலால்.
ஒன்று அலா முழுமதி ஊரும் மானம்போல்.
சென்றன தரள வான் சிவிகை ஈட்டமே.
 
  

மன்றல்     அம் புதுமலர்- நல்ல   மணத்தோடு கூடிய அழகிய
புதுமலர்கள்;  மழையிற்  சூழ்ந்தென  -  மேகத்தில் சூழ்ந்தாற் போல;
துன்று   
-  (மலர்கள்)   நெருங்கிய;   இரு   கூந்தலார்   -  மிக்க
கூந்தலையுடைய  பெண்களின்;  முகங்கள்  தோன்றலால்  - முகங்கள்
மட்டும்  காணப்படுவதால்;  ஒன்று  அலா முழுமதி - ஒன்று அல்லாத
மிகப்  பலவாகிய  நிறைமதிகள்; ஊரும் - ஏறிச் செல்லுகின்ற;  மானம்
போல்  
- விமானங்களைப்  போல; அவர் சிவிகை ஈட்டம் - மகளிர்
ஏறிச் செல்லுகின்ற பல்லக்குக் கூட்டங்கள்; சென்றன - சென்றன.

கூந்தல்மேல்    மலர்     சூழ்ந்திருப்பது     மேகத்தில்     மலர்
சூழ்ந்திருப்பதுபோலும் என்றார்.

பல்லக்குகளில்     பெண்கள்  தம்   முகம்    மட்டும்  தெரியுமாறு
முக்காடிட்டு  ஊர்ந்து  செல்வதால் அச் சிவிகைகள்   பல  நிறைமதிகள்
ஏறிச்  செல்லும்  விமானங்களைப்  போலும்  என்றார். - தற்குறிப்பேற்ற
அணி.   மழை   -   ஆகுபெயர்.   மானம்  -  விமானம்   என்பதன்
முதற்குறை.                                                18

                                    யானை குதிரைகளின் செலவு
 

750.மொய் திரைக் கடல் என முழங்கு மூக்குடைக்
கைகளின். திசை நிலைக் களிற்றை ஆய்வன. -
மையல் உற்று. இழி மத மழை அறாமையால்.
தொய்யலைக் கடந்தில. சூழி யானையே.