பக்கம் எண் :

  எழுச்சிப் படலம்475

ஊடிய     மனத்தினர்-  (தம்   கணவர்மீது)  பிணக்கு கொண்ட
மகளிரும்;  உறாத  நோக்கினர் - (தம் கணவர்மீது)  கண்பார்வையைச்
செலுத்தாதவர்களும்; நீடிய உயிர்ப்பினர் - பெருமூச்சு  விடுபவர்களும்;
நெரிந்த     நெற்றியர்   
-    (கோபத்தால்)    புருவம்    நெரிந்த
நெற்றியையுடையவர்களும்; தோடு அவிழ் கோதையும் - இதழ் விரிந்த
மலர்   மாலையையும்;   துறந்த   கூந்தலர்   -   துறந்த  கூந்தலம்
உடையவர்களாகிய  மகளிர்;  ஆடவர்  உயிரென - ஆண்களது உயிர்
பெண்ணுருக்  கொண்டதுபோல  என்று சொல்லுமாறு; அருகு - (அந்த
ஆடவரின்) பக்கத்திலே; போயினார் - சென்றார்கள்.

முன்பு     ஊடின  பெண்கள்  இராமனது    திருமணச்    செய்தி
கேட்டவுடன்.  அவ்  ஊடல் நீங்கித் தத்தம் கணவரோடு   அவர்களின்
உயிர்போலச் சென்றனர் என்பது. தன்மை நவிற்சியணி.             21
 

753.மாறு எனத் தடங்களைப் பொருது. மா மரம்
ஊறு பட்டு இடையிடை ஒடித்து. சாய்ந்து. உராய்.
ஆறு எனச் சென்றன - அருவி பாய் கவுள்.
தாறு எனக் கனல் உமிழ் தறுகண் யானையே.

 

அருவி  பாய் கவுள்- அருவிபோல மதநீர் பாயும் கன்னத்தையும்;
தாறு  எனக்  கனல் உமிழ்
- அங்குசம் என்ற சொல்லைக் கேட்டதும்
தீயைக்  கக்குகின்ற; தறுகண் யானை - அஞ்சாமையுடைய  யானைகள்;
மாறு  என  
-  தமக்குப் பகையென்று கருதி; தடங்களைப் பொருது-
இரு  கரைகளை  மோதி இடித்து; மாமரம் - பெரிய மரங்களை;  ஊறு
பட்டு  இடைஇடை  
-  முடியும்படி  நடுநடுவே;  ஒடித்து - ஒடித்தும்;
சாய்த்து  
-  கீழே  முறித்துச்  சாய்த்தும்;  உராய் -  (அம்மரங்களின்
மேல்)  உரசியும்; ஆறு என - ஓர் ஆறு செல்வது போல; சென்றன -
போயின.

கரைகளோடு  மோதுதல். மரங்களை ஒடித்தல். சாய்த்துத்  தள்ளுதல்.
உராய்தல்  - இவை  யானைக்கும்.  ஆற்றுக்கும்  ஒத்துள்ளன. அதனால்
யானை செல்வது ஆறு செல்வது போன்றது என்றார்.

பொருது.     ஒடித்து. சாய்த்து. உராய்  என்னும்  வினையெச்சங்கள்
யானைக்கும்  ஆற்றுக்கும்  பொருள்படுமாறு   பொதுவாக  அமைந்தன.
தாறு - குத்துக் கோல். அங்குசம்.                              22

                                            படைப் பெருக்கம்
 

754.உழுந்து இட இடம் இலை
 
   உலகம் எங்கணும்.
அழுந்திய உயிர்க்கு எலாம்
 
   அருட் கொம்பு ஆயினான்