பக்கம் எண் :

476பால காண்டம்  

எழுந்திலன்; எழுந்து இடைப்
   படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில்
   மிதிலை கூடிற்றே!
 

அழுந்திய    உயிர்க்கு  எலாம் -  (துன்பத்தில்)  ஆழ்ந்துள்ள
உயிர்களுக்கு  எல்லாம்; அருட் கொம்பு ஆயினான் - அருள் புரியும்
கொழு கொழும்பான தசரதன்; எழுந்திலன் - (இன்னும்  அயோத்தியை
விட்டு)  எழுந்து  புறப்படவில்லை;  உலகம்  எங்கணும்  -  (அப்படி
இருக்கையில்)  உலகத்தில்  எங்கும்;  உழுந்திட இடம்   இலை - ஓர்
உழுந்துகூடப்போட  இடமில்லை  (என்று   சொல்லும்படி);  எழுந்து -
(அயோத்தியிலிருந்து)  புறப்பட்டு;   இடை  -  (அயோத்தி - மிதிலை)
இடையிலே;   படரும்  -  செல்லுகின்ற;  சேனையின்  கொழுந்து -
படையின்  முன்னணி;  போய்  -  சென்று;  கொடிமதில்  மிதிலை-
கொடிகள்  அசையும்  மதில்  சூழ்ந்த  மிதிலை  நகரை;   கூடிற்று  -
அடைந்தது.

புறப்படத்  தொடங்கிய   தசரதனது  முன்னணிச்  சேனை  மிதிலை
நகரை அடைந்தது. உயர்வு நவிற்சியணி.

சேனை முழுவதும்  ஒரே  காலத்தில் எழுந்தால் அயோத்தியிலிருந்து
மிதிலை வரையிலும் நின்றாலும் நிற்க இடம் போதாது என்றார்.

உழுந்திட  இடமிலை   என்றது   சேனையின்  நெருக்கம்  கூறியது.
சேனையின் கொழுந்து - முன்சேனை.                          23

                                    வண்டியில் வயங்கிய மகளிர்
 

755.கண்டவர் மனங்கள் கைகோப்பக் காதலின்.
வண்டு இமிர் கோதையர் வதன ராசியால்.
பண் திகழ் பண்டிகள் பரிசின் செல்வன.
புண்டரிகத் தடம் போவ போன்றவே.
 

கண்டவர்     மனங்கள்- (தம்மைப்) பார்த்த  ஆடவரின் மனம்;
காதலின் கைகோப்ப
- காதலால் கலக்க; பண்திகழ் பரிசின் - பூட்டு
விளங்குகின்ற  தன்மையோடு;  செல்வன - செல்லுகின்ற; பண்டிகள் -
வண்டிகள்;   வண்டு  இமிர்  கோதையர்  - வண்டுகள்  ஒலிக்கின்ற
கூந்தலையுடைய    மகளிரின்;   வதன   ராசியால்   -  முகங்களது
கூட்டத்தால்; புண்டரீகம் தடம் போவ - தாமரை மலர்ந்த தடாகங்கள்
செல்வதை; போன்ற - ஒத்தன.

வண்டியில்   செல்லும் மகளிரின் முகங்கள் பூத்த தாமரைகள் போல்
விளங்கின.  அதனால்  வண்டி செல்வது தாமரைத்  தடாகமே  போவது
போன்றது என்றார். தற்குறிப்பேற்ற அணி.                       24