தனக்கு ஒரு பகையைக் காணமுடியாமல் காட்டு யானைகள் கூட்டமாகச் செல்லும் பெருவழியில் அவற்றின் மோப்பத்தையுணர்ந்த யானை (சேனை) யொன்று. அவை பகையினம் என்று கருதிப் பாகனுக்கும் அடங்காமல். வெறிகொண்டு அவ் யானைக் கூட்டம் சென்ற வழியே தனிவழியை உண்டாக்கிக் கொண்டு விரைந்து சென்றது. அது பழமையான நதி செல்லும் வழியை நாடியவாறு மற்றொரு சிற்றாறு பெருக்கெடுத்துச் செல்வது போன்று உள்ளது என்றார். யானையின் வேகத்தால் பறவைகள் சிதறப்பெறுவதாலும். எதிர்ந்த உயிர்களைக் கொன்று செல்வதால் அவற்றின் இறைச்சி வேட்கையாலும் ‘பாறு பின்செல’ என்றார். தண்டம்; யானை செல்வழி. 5 |
818. | பாத்த யானையின் பதங்களில் படு மதம் நாற. காத்த அங்குசம் நிமிர்ந்திட. கால் பிடித்து ஓடி. பூத்த ஏழிலைப் பாலையைப் பொடிப் பொடி ஆக. காத்திரங்களால். தலத்தொடும் தேய்த்தது - ஓர் களிறு. |
பாத்த யானையின் - (அணியணியாக) பிரித்துள்ள யானைகளைக் கட்டிய; பதங்களில் - இடங்களில்; படு மதம் - தோன்றும் மதநீரின்; நாற - மணம் போன்று (ஏழிலைப் பாலையிலிருந்து) மணம் வீசியதால்; ஓர் களிறு - (அதைத் தாங்காத) ஒரு யானையானது; காத்த அங்குசம் நிமிர்ந்திட - (தன்னைக்) கட்டுப்படுத்துகின்ற பாகன் கையிலுள்ள அங்குசமானது நிமிர்ந்து விடும்படி; கால்பிடித்து ஓடி - (மதத்தின் மணம் வந்த) வழியைப் பற்றிக் கொண்டு ஓடிப்போய்; பூத்த ஏழிலப் பாலையை - (மதமணம் வருவதற்குக் காரணமான) பூத்துள்ள ஏழிலைப் பாலை மரத்தை; பொடிப் பொடி ஆக - சிறுசிறு தூள்களாகுமாறு; காத்திரங்களால்- முன்னங்கால்களால்; தலத்தொடும் தேய்த்தது - தரையோடு தேய்த்துவிட்டது. |
சேனை தங்கிய சந்திர சயிலத்தின் சாரலில். ஏழிலைப் பாலை மரத்திலிருந்து யானையின் மதமணம் போன்ற மணம் வீச. யானைக் கூட்டத்திலிருந்த யானைகளில் ஒன்று மோப்பத்தால் அதையுணர்ந்து மதவெறியால் பாகனுக்கு அடங்காமல் அங்குசமும் நிமிர்ந்திட மதமணம் வந்த வழியை நாடிச் சென்று அங்குள்ள ஏழிலைப்பாலை மரத்தைப் பொடிபொடியாக ஆகுமாறு தன் முன்னங்கால்களால் தேய்த்தது என்றார். ஏழிலைப் பாலை: ஏழு நிரையாக அடுக்கிய நீண்ட இலைகளையுடைய பாலை என்பார் பரிமேலழகர் (பரிபா. 21-13) ‘சப்த பர்ணீ’ என்று இதனை வடமொழியில் குறிப்பர். 6 |
819. | அலகு இல் ஆனைகள் அநேகமும். அவற்றொடு மிடைந்த |