பக்கம் எண் :

536பால காண்டம்  

ஊடலின் சிவந்த நாட்டத்து
   உம்பர்தம் அரம்பை மாதர்.
தோடு அவிழ் கோதைநின்றும்
   துறந்த மந்தார மாலை.
வாடல. நறவு அறாத.
   வயின் வயின் வயங்கும் மாதோ!

 

ஆடவர்  ஆவி   சோர  -  (தம்)  கணவரின்  உயிர்  வருந்தித்
தளரும்படி;  அஞ்சனம்  வாரி  சோர - (தீட்டிய) மையுடன் கண்ணீர்
பெருகுமாறு; ஊடலில்  சிவந்த  நாட்டத்து  -  புலவியால் செந்நிறம்
அடைந்த   கண்களையுடைய;  உம்பர்தம்   அரம்பை   மாதர்   -
தேவர்களின்   மனைவியர்;   கோதை  நின்றும்   துறந்த   -  தம்
முடிகளிலிருந்து கழற்றி எறிந்த; தோடு அவிழ் மந்தார மாலை - இதழ்
விரிந்த  மந்தார  மாலைகள்;  வாடல நறவு அறாது - வாடாதனவாகித்
தேனும்  நீங்காமல்; வயின் வயின் வயங்கம் - அந்தந்த இடங்களிலே
விளங்கும்.

ஊடல்     கொண்ட  தேவ  மாதர் தம் கணர் வருந்துமாறு சிவந்த
கண்களில்  கண்ணீரைப்  பெருக்கிக்  கழற்றியெறிந்த மந்தார மாலைகள்
அம்  மலையின்  பல  இடங்களிலும்  காணப்படும்   என்பது.  தெய்வ
மாலையாதலின் வாடாமலும். நறவு அறாமலும் இருந்தன.           11
 

854.

மாந் தளிர் அனைய மேனிக்
   குறத்தியர் மாலை சூட்டி.
கூந்தல் அம் கமுகின் பாளை
   குழலினோடு ஒப்புக் காண்பார்;
ஏந்து இழை அரம்பை மாதர்
   எரி மணிக் கடகம் வாங்கி.
காந்தள் அம் போதில் பெய்து.
   கைகளோடு ஒப்புக் காண்பார்.
 

மாந் தளிர் அனைய- மாந் தளிரைப் போன்ற; மேனிக் குறத்தியர்
-  உடல்  நிறம்  கொண்ட  குறப்  பெண்கள்;  மாலை சூட்டி - மலர்
மாலைகளை அணிவித்து;  (பின்பு) கூந்தல் கமுகின் பாளை - கூந்தற்
கமுகின்   பாளைகளை;  குழலினோடு  ஒப்புக்  காண்பார்  -  (தம்)
கூந்தலோடு  வைத்து ஒப்பிட்டுக் காண்பார்கள்; ஏந்து இழை அரம்பை
மாதர்  
-  அழகிய  அணிகலன் பூண்ட தெய்வ மாதர்கள்; எரி மணிக்
கடகம்  வாங்கி  
-  நெருப்புப் போல ஒளிவிடும் மணிக் கடகங்களைக்
கழற்றி;  காந்தள் போதில்  பெய்து - காந்தள் மலர்களிலே அவற்றை
யணிந்து; கைகளோடு  ஒப்புக் காண்பார் - (தம்) கைகளோடு உவமை
காண்பார்கள்.