குழையெனும் காதணியும்; சேர்ந்து மின்ன - ஒருங்கிணைந்து மின்னவும்; பம்பு தேன் அலம்ப ஒல்கி - அணிந்துள்ள மாலைகளில் மொய்த்த வண்டுகள் ஒலிக்கவும் அசைந்து; பண்ணையின் ஆடல் நோக்கி - தோழியர் கூட்டத்தோடு அப்பெண்டிர் விளையாடுவதைப் பார்த்து; வம்புஅவிழ் அலங்கல் மார்பின் மைந்தரும் - மணம் விரிகின்ற மாலைகளையணிந்த மார்பினராய ஆடவரும்; கொடி அ(ன்)னாரை - மலர்க் கொடி அனைய மகளிரை; கொம்பொடும் குறித்து அறிந்து உணர்தல் தேற்றார் - இவை பூங்கொம்புகள். இவர் மகளிர் என்று ஊகித்து (தெளிவுற) உணர இயலாதவராக மயங்கி நின்றனர். பகுத்தறியும் தன்மையராய ஆடவரும். இவர் மகளிர். இவை மலர்க்கொடிகள் எனப் பகுத்துணர இயலாதவாறு தயங்கித் தவிக்க நேர்ந்தது என அம்மகளிரின் அழகும் அணியும் கூறி வியந்தவாறு. சுருளும் குழைகளும் மின்னுதல். தேன் அலம்ப அசைதல் பண்ணையில் ஆடல் எனும் செயல்கள் மகளிர்க்கும் மலர்க் கொம்புகட்கும் பொருந்தும் பொதுத்தன்மை கண்டு இரட்டுற மொழிந்தார். 5 குயில்களின் நாணம் |