பக்கம் எண் :

  பூக்கொய் படலம்567

வண்டுகள்  மொய்த்தன  எனினுமாம்.  வேற்றுப்  பொருள்  வைப்பணி.
துறுதல்:அடர்தல். செறிதல் போது: மலர்.                        12
 

902.

மெய்ப் போதின் நங்கைக்கு அணி அன்னவள்.
   வெண் பளிங்கில்
பொய்ப் போது தாங்கிப் பொலிகின்ற தன்
   மேனி நோக்கி.
‘இப் பாவை எம் கோற்கு உயிர் அன்னவள்’
   என்ன உன்னி.
கைப் போதினோடு நெடுங் கண்
   பனி சோர நின்றாள்.

 

மெய்   -  தன் உடம்பின் அழகால்; போதின் நங்கைக்கு - மலர்
மகளான    திருமகளுக்கு;    அணி   அன்னவள்   -   ஆபரணம்
போன்றிருக்கும்  ஒருத்தி;  வெண்  பளிங்கில் - வெண்மை நிறமுள்ள
பளிங்குப்   பாறையில்;  போது  தாங்கி  -  மலர்தாங்கிய  வண்ணம்;
பொலிகின்ற தன் மொய்மேனி
- (பிரதிபலிப்பதனால்) ஒளிர்கின்ற தன்
நிழல்  உடலை;  நோக்கி -  பார்த்து;  இ  பாவை  - இந்தப் பெண்;
எங்கோற்கு உயிர் அன்னவள்
- என் கணவனுக்கு உயிர் அனையவள்
ஆவாள்; என்ன உன்னி- என்று நினைத்து; நெடுங்கண் பனி சோர -
தன்  நீண்ட  விழிகளிலிருந்து  கண்ணீர்  பெருக;  கைப்போதினோடு
நின்றாள்
- கையில் ஏந்திய மலரோடு நின்றாள்.

மங்கையர்க்கெல்லாம்   அணியாகிய திருமகளுக்கு. இவள் அணியாக
இலங்கவல்ல   அழகு   உடையாள்  என்பார்.  “போதின்   நங்கைக்கு
அணியன்னவள்”  என்றார்.  தன்  மேனியழகை  இதுகாறும்  குறைவாக
நினைத்திருந்தவள்  ஆதலின்  பளிங்கில்  தன்  உருவை  முழுமையுறக்
கண்டு.   மிக   அழகு  பொலியும்   உருவாக  இலங்குவது  கொண்டு.
மகளிர்க்கே  உரிய  ஐயவுணர்வோடு. இவளை  என்  கணவன் காணின்
நிலை  தளர்வான்;  மனந்  திரிவான்  எனக்  கருதி  நெடுங்கண்  பனி
சோர்ந்தாள்.  ஒன்றைப்  பிறிதொன்றாகக்  கருதி  மயங்குதலால்   இது
மயக்க   அணி.   கணவர்   பால்   தங்கட்குள்ள   உரிமைப்பாட்டை.
பிறர்யார்க்கும்  பங்குதர அஞ்சும்.  மனப்பாங்கும்.  கணவர்  மாட்டுள்ள
பெரும்பற்றும் ஒருங்கு சுட்டியவாறு. பாவை - உவம ஆகு பெயர்.    13
 

903.

கோள் உண்ட திங்கள் முகத்தாள் ஒரு
   கொம்பு. ஒர் மன்னன்.
தோள் உண்ட மாலை ஒரு தோகையைச்
   சூட்ட நோக்கி.
தாள் உண்ட கச்சின் தகை உண்ட
   முலைக்கண். ஆலி.
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என.
   வார நின்றாள்.