செங்கயல் அனைய நாட்டம் - சிவந்த கயல் போன்ற கண்கள்; சிவப்புறச் சீறிப்போன மங்கை - (முழுதும்) மேலும் சிவப்பேறச் சினந்துபோன ஒரு நங்கை; ஓர் கமலச் சூழல் மறைந்தனள் - தாமரைப் பூக்கள் நிறைந்த ஒரு சூழலில் மறைந்துகொண்டாள்; அங்கு இடைஉற்ற குற்றம் - அங்கே. அவள் சினத்திற்குக் காரணமான பிழை; யாவது என்று அறிதல் தேற்றாம் - எது என்பது எம்மால் அறியக் கூடவில்லை; மறைய மைந்தன் - தாமரைகட்கிடையே. மறைந்த அவளைத் தேடுகிற அவள் கணவன்; பங்கயம் முகம் ஒன்று ஓராது - எது தாமரைப்பூ. எது மங்கையின் முகம் என்று உணர இயலாது; ஐயுற்றுப் பார்க்கின்றானும் - ஐயங்கொண்டு நோக்கியவாறு இருப்பவனும். அவர்களுக்குள் ஊடலுக்கான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம்; எது என்று நம்மால் குறிப்பிட்டுக் கூறமுடியாது ஆகையல். “அங்குடை உற்ற குற்றம்யாவது என்று அறிதல் தேற்றாம்” என்று நயந்தோன்றக் கூறினார். இவ்வாறு கவிஞர்பிரான் காவியப் போக்கில். தன்னை இடையிடையே வெளிப்படுத்திக் கொள்ளும் திறன் சுவை பயப்ப தொன்றாகும். தாமரை முகம் எனின். முகத்தை விடத் தாமரை சற்று உயர்ந்ததுதான் என்னும் பொருள்படும். “உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை” (தொல். உவம. 3) என்பர். ஆனால். இங்கே. உவமையும் பொருளும் எள்ளளவும் வேற்றுமையின்றிச் சமமாய் விட்டன; உவமை எது? பொருள் எது? வேற்றுமை தோன்றா நிலை எனக்கூறி மகளிரின் முக வனப்பை உச்சப்படுத்தினார். “மதியும் மடந்தை முகனும் அறியா. பதியிற் கலங்கிய மீன்” (திருக். 1116) என வள்ளுவக் காதலனும் ஏங்குவான். 10 |