பக்கம் எண் :

  உண்டாட்டுப் படலம்637

முனைந்துள்ளனர்     என்பார்.   “உடம்பும்  ஒன்றெனப் பொருத்துவர்
ஆம்  எனப்புல்லினர்”  என்றார்.  உடம்பும்   என்ற  உம்மை  உயிரே
யன்றி உடம்பும் எனும் பொருள்குறித்து நின்றது.                  48
 

1010.

வெதிர் பொரு தோளினாள் ஒருத்தி. வேந்தன் வந்து
எதிர்தலும். தன் மனம் எழுந்து முன் செல.
மதிமுகம் கதுமென வணங்கினாள்; அது.
புதுமை ஆதலின். அவற்கு அச்சம் பூத்ததே.
 

வெதிர்   பொரு  தோளினாள்  ஒருத்தி  -  மூங்கில்  போன்ற
தோளுடையாள்  ஒரு  மாது;  வேந்தன்  வந்து எதிர்தலும் - (ஊடல்
உற்றிருந்த அவள்முன்)  கணவன்  வந்து எதிர் நின்றவுடன்; தன் மனம்
எழுந்து   முன்   செல   
-   (அவன்பால்   உள்ள   விருப்பத்தால்
இவளையறியாது) இவள் மனம்  எழுந்து  அவன்பால் செல்ல; மதிமுகம்
கதுமென  வணங்கினாள்  
-  (தன்)  மதியனைய வதனத்தை (சாய்த்து)
அவன்  எதிர்பாராத  வண்ணம்)  வணங்கி   நின்றாள்;  அது புதுமை
ஆதலின்  அவற்கு  அச்சம்  பூத்தது  
-  இப்படி  வணங்கி நிற்பது.
(இவளிடம்   இது   வரை   காணாப்)    புதுமையாதலின்.   (எத்தனை
வெகுளியையுள்ளடக்கியதோ    இவ்வணக்கம்   என்று)    அவனுக்குப்
(பெரியதோர்) அச்சம் உண்டாயிற்று.

“மனைவி     உயர்வும்   கிழவோன்  பணிவும். நினையுங் காலைப்
புலவியுள்  உரிய” (தொல். பொருள். 31) ஆதலின்.  மரபு  மீறி மனைவி
பணிந்த  இப்புதுமை.  பெரு  வெகுளியின்  குறியீடு   எனக்  கணவன்
அஞ்சினன் என்க                                          49
 

1011.துனி வரு நலத்தொடு சோர்கின்றாள். ஒரு
குனி வரு நுதலிக்கு. கொழுநன் இன்றியே
தனி வரும் தோழியும். தாயை ஒத்தனள்-
இனி வரும் தென்றலும் இரவும் என்னவே.
 

துனி வருநலத்தொடு சோர்கின்றாள் ஒரு குனி வரு நுதலிக்கு -
ஊடலால்   வரும்  இன்பத்தை   எண்ணிக்   (கணவன்  வந்த  போது
வெகுண்டு.  அவன்  சென்ற  பின்பு  அவன்  சென்றதற்கு)   வருந்திச்
சோர்பவளாகிய  வளைந்த  நெற்றியுடையாள்  ஒருத்திக்கு;  கொழுநன்
இன்றியே  தனி  வரும்  தோழியும்
-  (தூதாகப்  போய்)  கணவன்
இல்லாமல்  தனித்து  வரும்  தன்  (உயிர்த்)   தோழியும்; இனி வரும்
தென்றலும்   இரவும்   என்ன   
-   (தனியே   இருக்கும்  இவளை
வருத்துதற்கு)  இனிமேல்  வரும்  தென்றலையும்   இரவையும்  போல;
தாயை  ஒத்தனள்
- (இடித்துரை கூறி இவளை இரவெல்லாம்  வருத்த)
இவள் தாயைப் போன்றவள் ஆயினாள்.