தனங்களின் இளையவர் தம்மின் மும்மடி - தனங்களையுடைய இள மகளிர்களைக் காட்டிலும் மும்மடங்காக; கனம் கனம் இடை இடைக் களிக்கும் கள்வன் ஆய் - மிக அதிகமாக அவ்வவ்விடங்களில் களிப்புக் கொண்டு (யார்க்கும் தெரியாமல்) கள்வனைப் போல்; மனங்களில் நுழைந்து - (ஆடவர் பெண்டிர் ஆகிய இருபாலார்) மனங்களுக்குள்ளே புகுந்து; அவர் மாந்து தேறலை - அவர்கள் பருகின மதுவின் தெளிவினை; அனங்கனும் அருந்தினான் ஆதல் வேண்டும் - மன்மதனும் உண்டிருப்பான் ஆதல் வேண்டும். ஆல்-அசை. மன்மதன் சித்தத்தில் உதிப்பவன் எனும் பொருள் தரும் ‘சித்தசன்’ எனும் பெயருடையான் ஆதலின். உள்வந்த மதுவை. உள்ளே உள்ள இவனும் உண்டிருப்பானாதலினால் அங்கிருப்பாரினும் அவன் மும்மடங்கு (மகிழ்வில்) பொலிந்தான் என்றார் 55 ஊடலும் கூடலும் |