பக்கம் எண் :

660பால காண்டம்  

தன்னையே அனையவன். தழலையே அனையவன்.
பொன்னின் வார் சிலை இறப் புயம் நிமிர்ந்து அருளினான்.
 

இன்னவாறு     இருவரும் இனியவாறு ஏக- இவ்வாறு. (தசரதன்.
சனகன்  ஆகிய)  இருவரும். இனிதே மிதிலையையடைய;  தன்னையே
அனையவன்
- தனக்கு உவமை தானே ஆகி  நின்றவனும்; தழலையே
அனையவன் பொன்னின் வார்சிலை
- நெருப்பினை ஒத்த நிறத்தினன்
ஆன   சிவ  பெருமானின்  அழகிய  வில்;  இறப்  புயம்  நிமிர்ந்து
அருளினான்     
-     இற்று    விழுமாறு    தோள்    ஆற்றலால்
எடுத்தருளியவனுமான  இராமபிரான்;  அத்துன்னுமா  நகரின்  நின்று
எதிர்வரத் துன்னினான்
- அழகு நெருங்கும் மாநகராகிய மிதிலையிலே
நின்று. எதிர் வரும் தந்தையை வரவேற்க நெருங்கினான்.

“தன்னையே  அனையவன்” - தனக்கு உவமை இல்லாதான்” (திருக்.
7)  “தன்  ஒப்பார்  இல்அப்பன்” (திருவாய். 6:3:7)  எனும்  ஆன்றோர்
வாக்குகளை  நினைப்பிப்பது.  சிவன்  கையில்  ஏந்திய  பொன்மயமான
மேரு  வில்லானது  ஆதலான்  “தழலையே  அனையவன்  பொன்னின்
வார்சிலை”  என்றார். “வடவரை வார்சிலை ஏங்கும்  மாத்திரத்து  இற்று
இரண்டாய்   விழ   வீங்குதோள்”  (கம்ப.  5089)   ஆதலின்.  “சிலை
இறப்புயம் நிமிர்ந்து அருளினான்” என்றார்.  தயரதன்  இங்கு  வருதற்கு
அப்புயமே    காரணம்    ஆதலான்.     அதனையே    இராமனுக்கு
அடையாக்கினார்.  வில்  ஒடித்த  புயத்தைக்   காட்டியவாறு.   வீதியில்
வருகிறான் தந்தையை வரவேற்கத் தசரத ராமன் என்க             19
 

1048.தம்பியும். தானும். அத் தானை மன்னவன் நகர்ப்
பம்பு திண் புரவியும். படைஞரும். புடை வர.
செம் பொனின். பசு மணித் தேரின் வந்து எய்தினான்-
உம்பரும் இம்பரும் உரகரும் தொழ உளான்.
 

உம்பரும்   இம்பரும்  உரகரும்   தொழ உளான்- மேலுலகத்
தேவர்களும்.  இவ்வுலக  மனிதர்களும்.  கீழ்  உலக  நாகர்களும் (என
மூவுலகத்து  உயிர்களும்) வணங்கி மகிழ உள்ளவனாகிய   இராமபிரான்;
பம்புதிண் புரவியும். படைஞரும் புடை வா
- நெருங்கிய வலிமைமிக்க
குதிரைகளும்.  படை  வீரர்களும் சூழ்ந்து  வர;  அத்தானைமன்னவன்
நகர்     
-     படைப்பெருமை    மிக்க     சனக    மன்னருடைய
அந்நகரத்தினின்றும்;  செம்பொனின்  பசுமணித்   தேரின்   வந்து
எய்தினான்  
-  சிவந்த பொன்னால் செய்யப் பெற்று.  பச்சை மணிகள்
பதிக்கப்   பெற்ற  தேரில்  ஏறி.  (தன்  தந்தையை)   எதிர்  கொள்ள
வந்தடைந்தான்.

“மூவுலகும்     தொழ  உள்ளான்”  தந்தையைத்  தொழ உள்ளான்
என்றபடி.   இராமனுடன்   வரும்    சேனை.    சனகன்   சேனையே.
சேனையின்றிஅரச குலத்தார்