பக்கம் எண் :

684பால காண்டம்  

கருங்  குழல் பாரம்- (தனக்கு முன்னே வந்து. இராமனைக் காண
இடம்பிடித்துக்    கொண்டுள்ள    மாதர்களின்)    கரிய    கூந்தலின்
தொகுதியும்;  வார்கொள் கனமுலை - கச்சணிந்த பருத்த மார்புகளும்;
கலை  சூழ்  அல்குல்  
-  மேகலை  சூழப்பெற்ற இடைசார் பகுதியும்
(எங்கும்);  நெருக்கின மறைப்ப ஆண்டு ஓர்  நீக்கிடம்  பெறாது -
நெருக்கம்  உற்றனவாய்  (இராமன்  திருமேனி  காணாவாறு)  மறைத்து
நிற்றலால்     இவையற்ற     இடம்    இல்லாமையால்;     விம்மும்
பெருந்தடங்கண்ணி    
-    வருந்தி    மறுகும்    மிகப்    பெரிய
கண்களையுடையாள்  ஒருத்தி;  பேர் எழில் ஆசை தூண்ட - (அவள்
கேள்வியுற்ற  இராமனது)  பேரழகு.  அவனைப்  பார்த்தாக  வேண்டும்
என்றும்  ஆசையினைத்  தூண்டுதலால்;  மருங்குலின்  வெளிகளூடே
வள்ளலை  நோக்குகின்றாள்  
-  முன்னே மறைந்து நிற்கும் மகளிரின்
இடையின்   இடைவெளிகளிடையே   வள்ளலாகிய   இராமபிரானைப்
பார்த்துக்கொண்டிருக்கின்றாள்.

“அகல்     அல்குல் தோள் கண் என மூவழிப்பெருகி. நுதல். அடி.
நுசுப்பு  என  மூவழிச்  சிறகி”  (கலி.  108) எனும்  உத்தம  மங்கையர்
இலக்கணம்   முற்றும்   அமைந்த   மகளிரே    அங்கே   உள்ளோர்
அனைவரும் எனும் கருத்தைச் சுவையுறக் கூறியவாறு.              17

                            இராமன் உலா வந்த வீதிகளின் நிலை
 

1080.வரிந்த வில் அனங்கன் வாளி
   மனங்களில் தைப்ப மாதர்
எரிந்த பூண் இனமும். கொங்கை
   வெயர்த்தபோது இழிந்த சாந்தும்.
சரிந்த மேகலையும். முத்தும்.
   சங்கமும் தாழ்ந்த கூந்தல்
வரிந்த பூந்தொடையும். அன்றி
   வெள்ளிடை அரிது - அவ் வீதி.
 
  

வரிந்த   வில் அனங்கன் வாளி மனங்களில் தைப்ப- வரிந்து
கட்டிய மன்மதனது அம்புகள் (அங்குள்ள மாதர்)  மனங்களில்  (வந்து)
பாய்கையில்;  மாதர் எரிந்த  பூண்  இனமும் - அம்மகளிரின் (விரக
தாபம்  மிக்க  உடம்பிலே  படுதலால்)  தீய்ந்து விழுகின்ற அணிகளின்
தொகுதியும்;  கொங்கை  வெயர்த்த  போது  இழிந்த சாந்தும்  -
(வெப்பத்தால்)      தனங்கள்      வெயர்த்தபோது      அங்கிருந்து
கரைந்தொழுகிய சந்தனமும்; சரிந்த மேகலையும் முத்தும்  சங்கமும்-
விரகத்தால்  உடல்  இளைத்தமையால்  கழன்று   சரிந்த   மேகலையும்
முத்து  மாலைகளும்  சங்கு வளையல்களும்; தாழ்ந்த கூந்தல் விரிந்த
பூந்  தொடையும்  அன்றி  
-  நீண்ட  கூந்தல் அவிழ்ந்து விரிவதால்
வீழ்ந்த  மலர்மாலை அல்லாமல்;  அவ்வீதி  வெள்ளிடை  அரிது -
வெற்றிடமாக ஓரிடமும் அவ்வீதியில் இல்லை.