பக்கம் எண் :

686பால காண்டம்  

துள்ளமை     காண்க.   முழுமுதற்    பரம்பொருளின்     பல்வேறு
வடிவங்களும்  ஒரு  வடிவத்தையோ  அல்லது  ஒரு  பகுதியினையோ
கண்ட ஒவ்வொரு சமயத்தவரும் அந்தந்த ஒரு  வடிவினையே அல்லது
பகுதியினையே    முடிவாகக்    கொண்டு   விட்டது   போலிருந்தது
இப்பெண்களின்   நிலை   என்றவாறு.   கவிஞர்  பிரானின்   கடவுட்
கொள்கை   துல்லியமாக   விளங்கும்  இடங்களுள்   இதுவும்  ஒன்று
எனலாம். அந்தந்த அங்கங்களைக் கண்டவர்கள்  அங்கங்கேயே நின்று
கொண்டு.   அடுத்த   அங்கங்களின்  அழகைக்   காண  விழிகளைப்
பெயர்க்க   முடியாமற்  போனமை.  அவர்கள்  குறையில்லை  என்று
உணர்த்தும்.                                              19

                                    பற்பல மகளிரின் நிலைகள்

கலி விருத்தம்
 

1082.தையல். சிற்றிடையாள். ஒரு தாழ்குழல்.
உய்ய மற்றுஅவள் உள்ளத்து ஒடுங்கினான்-
வையம் முற்றும் வயிற்றின் அடக்கிய
ஐயனின் பெரியார் இனி யாவரே?
 

தையல் சிற்றிடையாள் ஒரு தாழ் குழல்- பார்ப்பவர் உள்ளத்தில்
தைக்கும்    அழகினையுடையாளும்.   சிறிய   இடையினையுடையாளும்
தாழ்ந்த  கூந்தலினையுடையாளும்  ஆகிய  ஒருமங்கை ;  உய்ய மற்று
அவள்  உள்ளத்து  ஒடுங்கினான்  
- (வருந்தாமல்) வாழுமாறு அவள்
உள்ளத்துக்குள்ளே   (இராமபிரான்)  அடங்கியிருந்தான்;  அவள் யார்
எனின்;வையம் முற்றும் வயிற்றின் அடக்கிய -
உலகம் முழுவதையும்
தன்திரு வயிற்றிலே (ஒருகாலத்தே) அடக்கி வைத்த; ஐயனில் பெரியார்
யார் இனியாவர் -
தலைவன் அப்பெருமானை விடப் பெரியவர் வேறு
யாவர் உளர்?                                             20
 

1083.அலம்பு பாரக் குழலி ஒர் ஆயிழை.
சிலம்பும் மேகலையும் ஒலி செய்திட.
நலம் பெய் கொம்பின் நடந்து வந்து எய்தினாள்.
புலம்பு சேடியர் கைமிசைப் போயினாள்.
 

அலம்பு   பாரக்   குழலி  ஒர்  ஆயிழை- (மிகுந்த கனத்தால்)
அலைகின்ற கூந்தலையுடைய  ஆய்ந்தெடுத்த   அணிகலன்களையணிந்த
ஒரு மங்கை;சிலம்பும் மேகலையும் ஒலி செய்திட - (காலில்) சிலம்பும்
(இடையில்)  மேகலையும்  ஒலியெழுப்ப; நலம்பெய் கொம்பின் நடந்து
வந்து எய்தினாள்
- (இராமனைக் காண) அழகுமிக்க  பூங்கொடி ஒன்று
நடந்து  வருவது  போல வந்தடைந்தாள்; புலம்பு  சேடியர் கைமிசைப்
போயினாள்
- இராமனைக் கண்ணுற்றலால் வந்த விரகதாப  மிகுதியால்
தன்வயம்  இழந்து  பரவயப்  பட்டு  சோர்ந்து   இவள்   நிலை கண்டு
வருந்தும் தோழியர் கைத் தாங்கலில் போய்ச் சேர்ந்தாள்.