பக்கம் எண் :

688பால காண்டம்  

நிற்றலாகிய   இது; கை தவம் கொல்? கனவு கொலோ? என்றாள் -
மாயைதானோ? (அல்லது) கனவுக் காட்சிதானோ என்று வினாவினாள்.

ஆங்குள்ள    அத்தனை பொருள்களும் மறைந்து இராமன் ஒருவன்
மட்டுமே  கண்ணில்  படுவதால்  மந்திரமோ?   கனவோ? என மயங்க
நேர்ந்தது.  பக்தர்  உலகம்  இந்நிலையைத்  ‘தீவிர   பக்தி’  என்னும்.
வாள்நுதல்  - அன் மொழித் தொகை. “உருவின்  மிக்கதோர் உடம்பது
பெறுவது  அரிது” (சீவக. சிந். 154) ஆகலான்.  இத்தகைய  பேரழகைப்
பெற்றிட  இராமன்  பெருந்தவம்   புரிந்திருக்க   வேண்டும்  என்பாள்
“செய்தவன்”  என்றாள்.  இராமன். உருவம்  உருவெளித்  தோற்றமாய்.
இவள்  கண்முன் நின்றான் ஆதலின் இவ்வாறு   உரைத்தாள். கைதவம்
-  இழிந்த  தவம்;  வஞ்சனை; மாயை. என்னை  இத்தகைய  வேட்கை
கொளச் செய்தவன் என்றும் பொருள் கொளலாம்.                23
 
 

1086.மாது ஒருத்தி. மனத்தினை அல்லது ஓர்
தூது பெற்றிலள். இன் உயிர் சோர்கின்றாள்.
‘போது அரிக் கண் பொலன் குழைப் பூண் முலைச்
சீதை எத் தவம் செய்தனளோ?’ என்றாள்.
 

மாது ஒருத்தி மனத்தினை அல்லது ஓர் தூது பெற்றிலள்- ஒரு
மங்கை  (தன் மனத்தினைத்  தவிர  (இராமனிடம் அனுப்ப)  வேறு ஒரு
தூதரைப்பாரைப்  பெறாதவள் ஆகினாள்; இன்னுயிர் சோர்கின்றாள்-
(இராமன்  மேல்   கொண்ட வேட்கையால்) தன் இனிய உயிர் தளர்ந்து
சோர்வுற்றாள்; போது  அரிக்கண்  பொலன் குழைப் பூண் முலைச்
சீதை
- (தாமரை) மலர்  அனைய  சிவந்த  வரி  படர்ந்த கண்களையும்.
பொன்னால்    ஆன    குழைகளையும்    அணிகலன்கள்    தவழும்
செவிகளையும் தனங்களையும் உடைய சீதை; எத்தவம் செய்தனளோ?
என்றாள்   
-   (இந்த   இராமனை  மணந்து  கொள்ள)  எத்தகைய
பெருந்தவம் செய்தாளோ? என ஏங்கினாள்.

இறைப்    பேற்றிற்குத் தவம் இன்றியமையாதது என்று குறித்தவாறு.
“தவமும்  தவமுடையார்க்கு ஆகும்” (திருக். 292). தவம்  புரியாத என்
போன்றவர்கள்  இராமனையடைய  அவாவுவது   வீண்  என  நொந்து
கொண்டனள்.  வேறு  யாரிடமும்  சொல்ல   இயலாது. தன்  மனத்தை
நோக்கித்  தானே  கூறிக்  கொண்டதனால்.  “மனத்தினை  யல்லது ஓர்
தூது  பெற்றிலள்”  என்றார்.  அவனைக்  கண்டு  மகிழக்   கண்களும்
அவன்  இன்னுரை  கேட்டு  மகிழச்  செவிகளும்.  அணைத்து  மகிழத்
தனங்களையும்     சீதை     பெற்றுள்ளாள்     என     ஏங்குவாள்.
அவ்வுறுப்புகளை விதந்து எடுத்துக் கூறினாள். குழை - ஆகுபெயர்.  24
 

1087.பழுது இலா ஒரு பாவை அன்னாள். பதைத்து.
அழுது. வெய்துயிர்த்து. அன்புடைத் தோழியைத்
தொழுது. சோர்ந்து அயர்வாள். ‘இந்தத் தோன்றலை
எழுதலாம்கொல். இம் மன்மதனால்?’ என்றாள்.