மேனி வேர்த்து உயிர் தளர்ந்து-(இராம வேட்கையுற்றாள் ஒருத்தி) உடல் வியர்த்து உயிர்நிலை குலைந்து; விம்மலோடு ஆர்த்தியுற்ற மடந்தையர் ஆரையும் - விம்முதலோடு அருந்துயர் உற்ற பெண்டிர் எவரையும்; தீர்த்தன் சிந்தையின் செங்கணின் இத்தனை பார்த்திலான் - தூயோனான இராமபிரான். உள்ளத்தாலும் சிவந்த கண்களாலும் சிறிதேனும் நோக்கினான் அல்லன்; உன் பரிவிலனோ என்றாள் - அப்பெருமான் உள்ளத்தே (சிறிதேனும்) அன்பு என்பதே இல்லாதவனோ? என்று (துயரோடு) வினாவினாள். எத்தனை மகளிர் மொய்ப்பினும் ஏறெடுத்தும் நோக்காத இராமனின் இயல்புத் திறம் கூறி. இராமபிரானின் ஏக பத்தினி விரதத்தின் ஏற்றத்திற்கு அடித்தளம் இட்டவாறு. “இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்” (கம்ப. 5378) என்ற செம்மையன் இராமன் ஆதலான் “தீர்த்தன் இத்தனை சிந்தையின். செங்கணின் பார்த்திலன்” என்றார். ஆகவே. இத் |