பக்கம் எண் :

694பால காண்டம்  

இராமன்     திருமேனியழகை மேல் நின்று பார்த்துக் கொண்டிருக்க
வான்   உலக  மங்கையரும்   மையல்   வயப்பட்டனர்   என்பதனைக்
கவித்துவ அழகோடு இவ்வாறு கூறினார்.  “மண்ணையும்”  விண்ணையும்
ஒரு சேரப் பாதித்தது இராமனின்  பேரழகு  ஆயினும் அவன் யாராலும்
பாதிக்கப்படவில்லை  என்பது  கருத்து.   இராமனின்  பேராண்மையைப்
போகும் போக்கில் கவி உணர்த்திச் செல்லும் அழகு இது.          34
   

1097.‘மருள் மயங்கு மடந்தையர்மாட்டு ஒரு
பொருள் நயந்திலன் போகின்றதே; இவன்
கருணை என்பது கண்டு அறியான்; பெரும்
பருணிதன்கொல்? படு கொலையான்!’ என்றாள்.
 

மருள் மயங்கு மடந்தையர் மாட்டு ஒரு பொருள் நயந்திலன்-
‘இராமன்  (ஆகிய   இவன் எது கேட்டாலும் தரவுள்ள) மோக மயக்கில்
உள்ள     மகளிர்      எவரிடத்திருந்தும்     ஒரு    பொருளையும்
விரும்பாதவனாய்;   இவன்   போகின்றதே!  -   இவன்   இப்படிப்
போகின்றானே!  (இது  தகுமா?); கருணை  என்பது  கண்டறியான் -
(இவன்) அருள் என்னும்  (பெருங்)  குணத்தின்  தன்மையைச்  (சிறிதும்)
அனுபவித்து  அறியானோ?;  பெரும் பருணிதன்கொல்? - (மகளிரைச்
சிறிதும்   விரும்பாக்   குணம்)    பரிணமித்த    சிறந்த  ஞானியோ?;
படுகொலையான்  என்றாள்  
- (ஞானி மணந்து கொள்ளச் செல்லான்)
ஆதலின்   (இவன்   பெண்களைக்  கொல்லும்)  படுகொளையாளனே
ஆகல் வேண்டும் என்றாள் ஒருத்தி.

பருணிதன்:     குணங்கள்  பரிணமித்த  பக்குவ  ஞானி. புன்னகை.
கடைக்கண்   வீச்சு   முதலியவை   மங்கையர்   மாட்டு  ஆடவர்க்குக்
கிடைக்கும்  பொருள்கள்.  இராமன்   இத்தகைய  எந்தப் பொருளையும்
மகளிரிடத்துப்    பெற   விரும்பாமல்    செல்கின்றானே    என்பாள்.
“மடந்தையர்  மாட்டு  ஒரு  பொருள்  நயந்திலன்;  போகின்றதே! என
வியந்தாள்.  விருப்பு  வெறுப்பு   ஆகியவற்றையெல்லாம்  இந்த  இளம்
வயதிலேயே  வென்றுவிட்ட  பக்குவ  ஞானி  போலும் இவன் என்பாள்
“பருணிதன் கொல்!” என்று மேலும் வியந்தாள்.                  35
    

1098.தொய்யில் வெய்ய முலை. துடி போல் இடை
நையும் நொய்ய மருங்குல். ஓர் நங்கைதான்.
கையும் மெய்யும் அறிந்திலள்; கண்டவர்.
‘உய்யும். உய்யும்!’ எனத் தளர்ந்து ஓய்வுற்றாள்.
 

தொய்யில்    வெய்யமுலை- சந்தனத்தால் எழுதிய கோலத்தைக்
கொண்டும்  வெப்பம்  உடைய  தனங்களையும்;  துடி போல் இடை -
உடுக்கை போன்று இடை;நையும் நொய்ய மருங்குல்  ஒர்    நங்கை
தான் 
-   இடையே    சிறுத்து இருமருங்கும் பெருத்து மென்மையான
இடையினையும்  உடையாள் ஒருத்தி; கையும் மெய்யும் அறிந்திலள் -
(இராம வேட்கையால்) தன் ஒழுக்க நிலையையும் உடல்