பக்கம் எண் :

  உலாவியற் படலம்695

நிலையினையும்  உணராதவளாய்;   கண்டவர் உய்யும் உய்யும் எனத்
தளர்ந்து  ஓய்வுற்றாள்
-  அவள்   நிலையைக்  கண்டவர்கள் இவள்
பிழைப்பாளோ  ‘பிழைத்துக்  கொள்வாள்’    என  (ஒருவருக்கொருவர்
தம்முள்  ஐயுற்றுப் பேசும்படி)  உடலும் உள்ளமும்  சோர்ந்து  தளர்ந்து
கிடந்தாள்.

தொய்யில்:     மணப்பொருள்களால் மார்பில் எழுதப்படும் கோலம்.
கை: ஒழுக்கம். உய்யும்  உய்யும்?  என்பதை வினாவாக்கி இவள் இனிப்
பிழைப்பாளோ  என்று  வினவிக்  கொண்டனர்  எனினுமாம். அவர்கள்
அவ்வாறு  எண்ணியமைக்குக்  காரணம் கூறுவார்.  “தொய்யில் வெய்ய
முலை.   துடிபோல்  இடை  நையும்  நொய்ய   மருங்குல்”  என்றார்.
தனமோ    கனத்தது.   அதன்   மேல்   தொய்யில்     கனத்தையும்
சேர்ப்பார்களோ? என்பார். “தொய்யில் வெய்ய முலை” என்றார்.    36
 

1099.பூக ஊசல் புரிபவர்போல். ஒரு
பாகின் மென்மொழி. தன் மலர்ப் பாதங்கள்
சேகு சேர்தர. சேவகன் தேரின்பின்.
ஏகும். மீளும்; இது என் செய்தவாறுஅரோ?
 

ஒரு   பாகு   இன்மொழி-  (கருப்பஞ்  சாற்றின்)  பாகு போன்ற
இனிக்கும்  மொழி  பேசுவாள்  ஒருத்தி; பூக ஊசல் புரிபவர் போல் -
பாக்கு மரங்களுக்கிடையே கட்டப்பட்ட ஊஞ்சலில்  விரும்பி ஆடுபவர்
போன்று;தன் மலர்ப் பாதங்கள்  சேகு  சேர்தரச் சேவகன்  தேரின்பின்
ஏகும்;  மீளும்  -  தன்னுடைய  செந்தாமரைப்   பூப்போன்ற  சிவந்த
பாதங்கள்  மேலும்  சிவந்து  போகும்படி  உயர்  வீரனான  இராமனின்
தேர்  ஏகுகையில்  பின்னால்  செல்வாள். நாணத்தால்  மீள்வாள்; இது
என்  செய்த  வாறு?
- (தொடர்ந்து ஏகவும் மீளவும் இருக்கும் இவள்)
என்ன கருதி இவ்வாறு செய்கிறாள்?

அரோ     - அசை. ஒன்று. போக வேண்டும்;அல்லது திரும்பிவிட
வேண்டும்.  இரண்டில்  ஒன்று செய்யாமல் இரண்டும்   செய்கிற  இவள்
உகந்தது  என்  என  வியந்தார்.  மையல் கொண்டார்  ஊசல்  ஆடும்
உளத்தினராய்த்   தவிப்பவர்   எனச்  சுட்டியவாறு  “கமுகு    பூண்ட
ஊசலில்.  மகளிர்  மைந்தர் சிந்தையோடு  உலவக் கண்டார்” (கம்.488)
எனவும் “ஊசல் ஆடி  வளையும்  உளத்தினான்” (கம்ப. 5167) எனவும்
தடுமாறு நிலைக்கு ஊசலை உவமிப்பார்.                        37
 
  

1100.பெருத்த காதலின் பேதுறு மாதரின்
ஒருத்தி. மற்று அங்கு ஒருத்தியை நோக்கி. ‘என்
கருத்தும் அவ் வழிக் கண்டது உண்டோ?’ என்றாள்-
அருத்தி உற்றபின் நாணம் உண்டாகுமோ?
 

பெருத்த    காதலின் பேதுறு  மாதரின்  ஒருத்தி- வரம்பிகந்த
வேட்கையினால்  மதி  மயக்கமுற்ற   மங்கையர்களுக்குள்ள    ஒருத்தி;
மற்று அங்கு ஒருத்தியை நோக்கி
- அவ்விடத்து வந்த இன்னொருத்தி