அங்கு நங்கை ஒரு பொன் - அங்கே. பெண்களுட் சிறந்தவளாய திருமகளைப் போன்றாள் ஒருத்தி; தமர் நயந்தார் உய்ய. தங்கள் இன்னுயிரும் கொடுத்தார் - இந்த இராமபிரானுடைய குலத்தினர். தம்மை விரும்பி அடைந்தவர்கள் பிழைக்குமாறு தங்களுடைய இனிய உயிரையும் ஈந்தவர் ஆவர்; எங்கள் இன்னுயிர் எங்களுக்கு ஈகலா வெங்கண் - (அப்படியிருக்க) எங்களுக்கு உரிய இனிய உயிரையும் (கவர்ந்து கொண்டு) எங்களுக்குக் கொடுத்திடாத கொடுந்தன்மை; இவற்கு எங்ஙன் விளைந்தது? என்றாள்- இந்த இராமனுக்கு எவ்வாறு உண்டாயிற்று என்று வினவினாள். பொன்: திருமகள். புறவொன்றின் பொருட்டாகத் துலைபுக்க பெருந்தகை (கம்ப. 243) யாகிய சிபி வேந்தனின் குலத்து வேந்தனா இவன்? என்கிறாள். குல வேந்தரில் மாறுபட்ட ஓரில் உடைய குணவேந்தன் என்பதனால் இராமன் புகழே மேம்படல் காண்க. இவன் முன்னோர். நயந்தோர்க்கு உயிர் கொடுக்க. இவன் உயிர் எடுக்க உள்ளான் ஆனது எப்படி என்று வியக்கிறாள். 39 |