| சீனர். தெங்கணர். செஞ் சகர். சோமகர். சோனகேசர். துருக்கர். குருக்களே. |
மான மாகதர். மச்சர். மிலேச்சர்கள் - பெருமை மிக்க மாகத மன்னரும் மச்ச நாட்டரசரும். மிலேச்ச தேசத்தரசரும்; - ஏனை வீர இலாடர். விதர்ப்பர்கள் - மற்றுமுள்ள வீரமிக்க இலாட மன்னரும். விதர்ப்ப மன்னரும்; சீனர். தெங்கணர். செஞ்சகர். சோமகர் - (மகா) சீன தேசத்தரசரும். தெங்கண தேசத்தரசரும். செம்மையான சக தேசத்தரசரும். சோமக நாட்டரசரும்; சோனகேசர். துருக்கர். குருக்களே - சோனக நாட்டரசரும். துருக்க தேச மன்னரும். குருநாட்டரசர்களும். 48 |
1111. | ஏதி யாதவர். ஏழ் திறல் கொங்கணர். சேதி ராசர். தெலுங்கர். கருநடர். ஆதி வானம் கவித்த அவனி வாழ் சோதி நீள் முடி மன்னரும் துன்னினார். |
ஏதி யாதவர். ஏழ்திறல் கொங்கணர் - ஆயுதங்கள் ஏந்திய யாதவ அரசரும். ஏழு பகுப்பினையுடைய கொங்கண அரசர்களும்; சேதிராசர். தெலுங்கர் கருநடர் - சேதி நாட்டு மன்னர்களும். தெலுங்கு தேசத்தரசரும். கருநாடக மன்னரும்; ஆதி வானம் கவித்த அவனி வாழ் சோதி நீள்முடி மன்னரும் துன்னினார் - (இவ்வாறு பஞ்ச பூதங்களுள்) முதலாவதான ஆகாயத்தாற் சூழப்பட்டுள்ள மண்ணுலகில் வாழும் ஒளிமிக்க மகுடங்களையணிந்த அத்தனை அரசர்களும் அம்மண்டபத்தில் வந்து நெருங்கினார்கள்.49 |
மங்கையரின் சாமரை வீச்சும் பல்லாண்டும் |
1112. | தீங் கரும்பினும் தித்திக்கும் இன் சொலார் தாங்கு சாமரை. மாடு தயங்குவ: ஓங்கி ஓங்கி வளர்ந்து. உயர் கீர்த்தியின் பூங் கொழுந்து பொலிவன போன்றவே. |
தீங்கரும்பினும் தித்திக்கும் இன் சொலார் - இனிய கரும்பினும் இனிக்கின்ற இன்சொற்களைப்பேசும் மகளிர்; தாங்கு சாமரை மாடு தயங்குவ - வீசுகின்ற சாமரங்கள் (தசரத வேந்தரின்) பக்கங்களில் விளங்குபவை; ஓங்கி ஓங்கி வளர்ந்து உயர் கீர்த்தியின் பூங்கொழுந்து பொலிவன போன்ற.- மிக உயர்ந்து (விண்ணகம்முட்ட) வளர்ந்து மற்றெல்லோர் புகழினும் உயர்ந்துள்ள (தசரதசக்கரவர்த்தியின்) மிகு புகழாகிய (பருமரத்தின்) அழகிய இளந்தளிர்கள் மின்னுவதை ஒத்திருந்தன. |