பக்கம் எண் :

  கோலம் காண் படலம்709


 

பொதி இருள் அளக பந்தி
   பூட்டிய பூட்டும் இட்டார்.

 

விதியது   வகையால்  வானமீன்  இனம்  பிறையை    வந்து
கதுவுறுகின்றது என்ன  -  கூடுதற்கரிய  முறைப்படி  வானத்து  மீன்
கூட்டம் பிறைத் திங்களைப் பற்றிக் கொள்வது போல; கொழுந்து ஒளி
கஞலத்தூக்கி 
 -   சுட்டி  என்னும்  (விண்மீன்கள்   வடிவினதாகிய)
ஒளியுமிழும் அணியை (நெற்றியில்) தொங்க விட்டு; மதியினைத்  தந்த
மேகம் மருங்கு நா வளைப்பது என்ன - சந்திரன் என்னும் கன்றைப்
பெற்ற  மேகம்  என்னும்  தாய்  தன் நாவால்  (வெளிப்புறத்திலிருந்து
கன்றைத் தடவ) நீட்டி வளைப்பது போல்; பொதி இருள் அளக பந்தி
பூட்டிய sபூட்டும்  இட்டார்
 - இருள் பொதிந்த முன் நெற்றி மயிரின்
ஒழுங்கிலே   பூட்டுதற்கு  உரிய  பூட்டு  என்னும்   ஆபரணத்தையும்
பூட்டினர் (தோழியர்.)   

சிறு    விண்மீன்  வரிசைபோன்று   இணைந்து   நெற்றிச்  சுட்டி
நெற்றியில்   தொங்குவது.  விண்மீன்கள்  பிறையைக்  கவ்வ  வந்தது
போன்றது  என்றார்.  இறுதியடியிரண்டில்.  மேகம்  தாய்க்கும்.  முகம்
சந்திரனுக்கும்.  பூட்டு எனும்  அணி தாயின் நாக்கிற்கும்  உவமையாம்.
இது   இல்பொருள்  உவமை.  நெற்றிச்  சுட்டியை  உச்சி   வகிட்டில்
இணைத்துப்   பூட்டும்  அணிபூட்டு.  கூந்தல்  தாய்ப்பசு   போலவும்.
நெற்றிச்சுட்டி  தாயின் கன்று போலவும். இவற்றை இணைக்கும்  பூட்டு.
தாய்ப்பசுவின் நாக்குப் போலவும் இருந்தன என்க.               5
 

                                              குழை யணிதல்
 

1122. 
  

‘வெள்ளத்தின் சடிலத்தான்தன்
   வெஞ் சிலை இறுத்த வீரன்
தள்ளத் தன் ஆவி சோர.
   தனிப் பெரும் பெண்மைதன்னை
அள்ளிக்கொண்டு அகன்ற காளை
   அல்லன்கொல்? ஆம்கொல்? என்பாள்’
உள்ளத்தின் ஊசலாடும்
   குழை நிழல் உமிழ இட்டார்.
 

வெள்ளத்தின்  சடிலத்தான்தன்  வெஞ்சிலை இறுத்த  வீரன் -
கங்கை நீர் வெள்ளத்தைத் தன் சடையிலே தரித்துள்ள சிவபெருமானது
வலியவில்லை ஒடித்த வீரன்; தன் ஆவி சோரத்தள்ள தனிப் பெரும்
பெண்மைதன்னை
-  தனது  உயிர்  சோருமாறும்  (உடல்)  தளர்ந்து
போகுமாறும்  ஒப்பற்ற  தன்  பெண்தன்மையை;  அள்ளிக் கொண்டு
அகன்ற காளை அல்லன் கொல்  ஆம்கொல் என்பாள்
- கவர்ந்து
கொண்டு  அகன்ற  (கன்னிமாடத்திலிருந்து நான் பார்த்த)   இளைஞன்
அல்லனோ?     அவ்விளைஞனே    தானோ?    என்று    ஐயுறும்
சீதையினுடைய; உள்ளத்தின்  ஊசல்  ஆடும் குழை நிழல் உமிழ