பக்கம் எண் :

710பால காண்டம்  

விட்டார்  -  மனம்  (அலைந்து தவிப்பது) போல.  அசைகின்ற குழை
என்னும்    காதணிகளை   ஒளியுமிழுமாறு    சீதையின்   காதுகளில்
(தோழியர்) பூட்டினர்.   

வில்     ஒடித்த வீரன். கன்னி மாடத்தில் தன் கண்வழி  நுழைந்து
இதயத்தில்    நிறைந்துள்ள    அவனே   என்பதனைத்   தெளிவாக
அறியாமையால்.  சீதை தவித்த தவிப்பினை உணர்த்துவதற்கு.  கவிஞர்
பிரானுக்கு.  காதணியின்  அசைவு  போதுமானதாயிற்று.  இந்த  ஐயம்
விடற்காக “கைவளை திருத்துபு கடைக்கணின் உணர்வதாக” (கம். 1153)
மேலே  கூறுவார்.  “தள்ளத்தன் ஆவிசோர” என்பதனை. “தன் ஆவி
சோரத்   தள்ள”   எனக்கூட்டுக.  இராமன்.  சீதை   பெண்மையினை
அள்ளிக்கொண்டு  போனதை.  “சிந்தையும்  நிறையும்   மெய்ந்நலனும்
பின்செல.  மைந்தனும் முனியொடு மறையப் போயினான்.”  (கம்ப. 518)
என முன்பு கூறினார். சடிலம் - சடை.                          6
 

                                          கழுத்தணி யணிதல்

1123.   

கோன் அணி சங்கம் வந்து
   குடியிருந்தனைய கண்டத்து.
ஈனம் இல் கலங்கள் தம்மின்
   இயைவன அணிதல் செய்தார்;
மான் அணி நோக்கினார்தம்
   மங்கலக் கழுத்துக்கு எல்லாம்
தான் அணி ஆன போது.
   தனக்கு அணி யாது மாதோ?
 

கோன் அணி சங்கம் வந்து குடியிருந்து அனைய கண்டத்து -
தலைவனான  திருமால்  தாங்கும்  சங்கு (இங்கு) வந்து  குடியிருந்தாற்
போன்ற   (சீதையின்)   கழுத்தில்; ஈனம்  இல்  கலங்கள்  தம்மில்
இயைவன  அணிதல்  செய்தார்
 -   குற்றமற்ற    ஆபரணங்களில்
பொருந்துவனவற்றைப்  பூட்டினார்கள்; மான் அணி நோக்கினார் தம்
மங்கலக் கழுத்துக்கு எல்லாம்
- மானின் விழிகளையுடைய (உலகத்து)
மங்கையர் மாங்கலிய நாணோடு கூடிய கழுத்துகளுக்கு எல்லாம்;  நான்
அணி   ஆனபோது
   -    (திரு   என்னும்    அடையோடுகூடித்
திருமாங்கல்யம்        என்று)          தானே         ஓர்ஒப்பற்ற
அலங்காரமாயிருக்கும்போது;  தனக்கு  அணியாது  - தன் கழுத்துக்கு
ஏற்ற அணியாவது எது? (ஒன்றும் இல்லை.)   

சீதையின்   கழுத்துக்கு அழகுதரும் சிறப்புடைய அணிகள் உலகில்
எதுவும்    இல்லையாயினும்.    தோழியர்    உலக     ழக்குக்கேற்ப
இருப்பனவற்றில்  சிறப்புளவற்றைப்  பூட்டினர்  என்க.    பிராட்டியின்
அவதாரம்   இலக்குமியாகிய  திருவின்  அவதாரமாதலின்.   உலகத்து
மகளிர்  கழுத்தில் அணியும் “திரு”மாங்கலியம். ஆக  இருக்கும் இவள்
கழுத்திற்கு யாரால் தகுந்த அணி அணிய இயலும் என்று  வியந்தவாறு
ஒரு பெண். மணங்கொள்ளுங் காலை. அவள் பொன்னும்