பக்கம் எண் :

  கோலம் காண் படலம்711

பொருளும்   வாழ்க்கையின்  புனிதத்  தன்மையும்  அப்பொழுதுதான்
அவள்  அடைகின்றாள்  ஆதலின்.  திருமகள் அவளை அப்பொழுது
தான் வந்து அடைகிறாள் எனக்கருதி. மணத்திற்குத் திருமணம்  எனப்
பெயரிட்டனர்   முன்னோர்.   அவளுக்கு  அவன்  அடையாளமாகப்
பூட்டும் மங்கல நாணிற்கு. “திரு” என்று பெயர் இட்டனர். மாங்கல்யம்
சூட்டுதலை.     “திருப்பூட்டு”     என்று    இன்றும்    வழங்குவர்.
இவற்றையெல்லாம் கருத்துட் கொண்டு. “மான் அணி நோக்கினார் தம்
மங்கலக்  கழுத்துக்கெல்லாம்  தான் அணி ஆனது” என்றார். இவளே
எல்லாப்  பெண்கள் கழுத்துக்குள் “திருமங்கலம்” ஆம் போது. இவள்
கழுத்திற்கு   எதைப்  பூட்டுவது  என  வியந்தார்.  சீதை  திருமணச்
சடங்கில்   மாங்கலியம்   தரித்தது   கூறப்பட   வில்லையே  எனும்
வினாவிற்கு  விடைதருவார்  போல. மகளிர் கழுத்துக்கெல்லாம். “தான்
அணி ஆனபோது. தனக்கு அணியாது?” என்று வியந்தார்.   

முதனூலில்.  திருமாங்கலிய தாரணம்  குறிக்கப்படவில்லையாயினும்.
கம்பர்பிரான்  காலத்தில்  அது  வழக்கிலிருந்தது எனக்  குறிப்பிப்பார்
போல.  “மற்றைநல்  அணிகள்  காண் உன் மங்கலங் காத்தது” (கம்ப.
5262)   எனக்  குறிப்பிப்பார்.  “மங்கல  அணியை  நீக்கி  மணியணி
துறந்து” (கம்ப. 4320) எனத் தாரையைக் குறிப்பார்.   

“ஈகையரிய     இழையணிமகளிர் (புறம். 127) எனும்  புறப்பாட்டின்
தொடருக்கு.  “பிறிதோர் அணிகலமுமின்றிக் கொடுத்தற்கரிய  மங்கலிய
சூத்திரத்தை  யணிந்த  மகளிர்”  என  அதன்  உரையாளர்  வரைந்த
உரையும்.  “மங்கல  அணியிற் பிறிதணி மகிழாள்” (சிலப்.  அந்தி: 50)
எனும் சிலம்பின் தொடரும் இங்கு நினைவு கூரத்தக்கன.           7
 

                                       முத்த மாலை யணிதல்
 

1124. 
  

கோண் இலா வான மீன்கள்
   இயைவன கோத்தது என்கோ?
வாள் நிலா வயங்கு செவ்வி
     வளர் பிறை வகிர்ந்தது என்கோ?
நாணில் ஆம் நகையில் நின்ற
   நளிர் நிலாத் தவழ்ந்தது என்கோ?-
பூண் நிலாம் முலைமேல் ஆர
   முத்தை - யான் புகல்வது என்னோ?
 

பூண்நிலாம்  முலைமேல் ஆரமுத்தை - ஆபரணங்கள் உலாவும்
சீதையின்  தனங்களின்  மேல் உள்ள முத்துமாலையை; கோண்  இலா
வானமீன்கள் இயைவன கோத்தது  என்கோ?
- கோணுதல் இன்றித்
தத்தமக்குரிய     வானப்பாதைகளில்    உலாவும்     விண்மீன்களில்
பொருந்துவனவற்றை   எடுத்துக்   கோத்தது   (இது)   என்பேனோ?;
வாள்நிலா வயங்கு செவ்வி வளர்பிறை வகிர்ந்தது என்கோ - ஒளி
நிலவும் அழகுத்தோற்றமுடைய வளர்பிறைச்  சந்திரனைத்  துண்டாக்கிச்
செய்யப்பட்டது (இது)  என்பேனோ?; நாணில் ஆம் நகையில் நின்ற
நளிர்  நிலாத்  தவழ்ந்தது  என்கோ?
- பலரும் நிறைந்த சபையில்
இராமனைக்