பக்கம் எண் :

750பால காண்டம்  

பான்.   “ஒருகால்”   என்றான்.  வினவாதவர்   எனப்   பிராட்டியைப்
பலர்பாலாற் கூறுவது உலகப் பொதுக் கருத்து உரைத்தவாறு.        16
 

1176.‘தன் நோக்கு எரி கால். தகை. வாள் அரவின்
பல் நோக்கினது என்பது பண்டுகொலாம்;
என் நோக்கினும். நெஞ்சினும். என்றும் உளார்
மென் நோக்கினதே
- கடு வல் விடமே!

 

கடுவல்விடம்   - மிகக் கொடிய வலிமை வாய்ந்த விடமானது;  தன்
நோக்கு  எரிகால் தகைவாள் அரவின்  பல்  நோக்கினது
-  தன்
கண்களினின்று  தீ  கக்கும்   தன்மையுடைய   வாள்   போற் கொடிய
பாம்பினது  பல்லை  இடமாகக் கொண்டுள்ளது; என்பது பண்டு கொல்
ஆம்   
-   என்பது  பழைய  செய்தி  போலும்;  என்  நோக்கினும்
நெஞ்சினும் என்றும்  உளார்  மெல் நோக்கினது
- (இப்பொழுதோ
அக்கொடிய  நஞ்சு)  என்  விழிகளிலும்  நெஞ்சினிலும்    எப்போதும்
நீங்காது  இருப்பவராகிய  அந்நங்கையரின்  குளிர்ந்த   பார்வையையே
இடமாகக் கொண்டுள்ளது என்பது தெளிவு ஆயிற்று.  

சனகியின்     பார்வை காதல் நோயை  மிகுவித்துப்  பெருந்துன்பம்
தருவது   குறித்து  விடமாகக்  கூறப்பட்டது.  “இரு  நோக்கு    இவள்
உண்கண்  உள்ளது ஒரு நோக்கு நோய் நோக்கு” (குறள். 1091)  என்பர்
ஆதலின்   நோய்   நோக்கின்   வலிமை   குறித்தவாறு.     இராமன்
நோக்கியிருத்தல்   உருவெளித்   தோற்றத்தில்   இருத்தல்;   நெஞ்சில்
இருத்தல்   எப்போதும்   நினைவாய்   இருத்தல்.  நோக்கில்    நஞ்சு
எரிகால்வது    ஒன்றை    விலக்கிப்    பிறிதொன்றாக    நிறுவுவதால்
அவநுதியணி.                                              17
 

1177.‘கல். ஆர் மலர் சூழ் கழி. வார் பொழிலோடு.
எல்லாம் உளஆயினும். என் மனமோ-
சொல் ஆர் அமுதின் சுவையோடு இனிது ஆம்
மெல் ஓதியர்தாம் விளையாடு இடமே!*

 

கல்  ஆர் மலர்சூழ் கழி. வார் பொழிலோடு- செய்குன்றுகளும்.
நிறைந்தமலர்  சூழ்ந்த  உப்பங்கழிகளும்.  நீண்ட மலர்ச்  சோலைகளும்
விளையாடும்;  எல்லாம்  உள ஆயினும் - மற்றும் பல ஆடிடங்களும்
இடங்களாக இருக்கவும்;  சொல்  ஆர் அமுதின் சுவையோடு இனிது
ஆம்  
-  பேசும்   சொற்களைப்  பெறுதற்கரிய  அமுதச்  சுவையினும்
இனியவாகப்  பேசுகின்ற; மெல்  ஓதியர்தாம்  விளையாடு  இடம் -
மெல்லிய   கூந்தலையுடைய  அப்பெண்டிர்   விளையாடும்   இடமாகக்
கொண்டது; என் மனமோ - என் மனந்தானோ?  

உயர்பண்புடைய      மகளிர்.     தலைவனது     நெஞ்சினையே
விளையாடுகளமாகக்     கொள்வர்.    ஓயா      நினைவில்    அவர்
உள்ளத்துலாவுதலால் விளையாடிடம் ஆயிற்று  நெஞ்சம்  என்க. மலைச்
சோலை.  கழிக்கானல்  மலர்ப்  பூங்கா  எனப்  பலப்பல  ஆடிடங்கள்.
அரசிளங்  குமரியாகிய  அவளுக்கு   விளையாடக்  காத்திருக்க.   என்
மனத்தை    ஏன்   அவள்   ஆடுகளமாகத்    தேர்ந்தாளோ    என
வியந்தவாறு.                                               18