பக்கம் எண் :

  பரசுராமப் படலம்811

1275.நிருபர்க்கு ஒரு பழி பற்றிட.
   நில மன்னவர் குலமும்
கரு அற்றிட. மழுவாள் கொடு
   களை கட்டு. உயிர் கவரா.
இருபத்தொரு படிகால். இமிழ்
   கடல் ஒத்து அலை எறியும்
குருதிப் புனல்அதனில். புக
   முழுகித் தனி குடைவான்;
 

நிருபர்க்கு    ஒருபழிபற்றிட- (உலகாளும்) அரசர்கட்கு எல்லாம்
(தன்    தந்தையைக்    கொன்றதனால்)     ஒப்பற்ற     பழியொன்று
பற்றிக்கொள்ள; நிலமன்னவர்குலமும் - அவ் அரசர் குலம்  முழுவதும்;
கரு  அற்றிட  
-  கரு  அற்று  ஒழியும்படி; இருபத்தொரு படிகால்-
இருபத்தொரு  தலைமுறை; மழுவாள் கொடு - (தன்)  மழுவாயுதத்தைக்
கொண்டு;  உயிர்  கவரா - அவர்களைக் கொன்று உயிர்களை  வாங்கி;
களைகட்டு
- இங்ஙனம். (பூமியிலுள்ள) களைகளைப் பறித்து;  எழுகடல்
ஒத்து  அலை  எறியும்  
-  (பொங்கி) எழும்கடலைப் போன்று அலை
வீசுகின்ற;  குருதிப்  புனல்  அதனில் - (அம் மன்னர்களின்)  இரத்த
வெள்ளத்தில்;  புக   முழுகித்   தனி   குடைவான்  -  (தன்னுடல்)
அமிழும்படி மூழ்கித் தனியே நீராடுபவனும் -  

பரசுராமன்    கார்த்த வீரியார்ச்சுனனைக் கொன்றமைக்காக.  கார்த்த
வீரியனின் மக்கள். பரசுராமனின் தந்தையைக் கொன்று   ப ழிவாங்கினர்.
பரசுராமனின்  தாய்.  கணவன்  இறந்தவுடன்   இருபத்தொரு    முறை.
மார்பில்  அடித்து  அழுததற்காக.  இருபத்தொரு   தலைமுறை   அரச
குலத்தைப்    பழிவாங்குவேன்   எனப்   பரசுராமன்   சபதமிட்டதாகப்
பாகவதம்  கூறும்.  அரசர்கள்   இரத்தத்தில் சியமந்த  பஞ்சகம்  எனும்
ஐந்து  இரத்தக் குளங்களை ஏற்படுத்தி. பரசுராமன்  அதில்  குளித்தான்
ஆதலால்.   “இமிழ்  கடல்  ஒத்து  அலை  எறியும்   குருதிப்   புனல்
அதனில்  புக  முழுகி”  என்றார்.  ஓர்  அரசன்   ஒரு  நிரபராதியைக்
கொன்றதனால்   வந்த  பழி.  அரச  குலம்   முழுவதையும்   பாதித்த
செயலுக்கு  வருந்துபவராய்.  “நிருபர்க்கு  ஒரு   பழிபற்றிட   என்றார்”
படிகால்  -  தலை  முறை  “ஏழேழ் படிகால்  எமையாண்ட  எம்மான்”
(1086-9) என்பது தேவாரம்.                                   13
   

1276.கமை ஒப்பது ஒர் தவமும். சுடு
   கனல் ஒப்பது ஒர் சினமும்;
சமையப் பெரிது உடையான்; நெறி
   தள்ளுற்று. இடை தளரும்
அமையத்து. உயர் பறவைக்கு இனிது
   ஆறு ஆம் வகை. சீறா.
சிமையக் கிரி உருவ. தனி
   வடி வாளிகள் தெரிவான்;