-கொடியனான இவன் (இங்கு) வர; நிபம் என்னைகொல் என - காரணம் என்னவோ என்று; வெய்துறும் வேலை - வெப்பப் பெருமூச்சு விடும் காலத்தில்- பரசுராமன். தான் வென்ற உலகம் முழுவதையும் காசியப முனிவனுக்குத் தானஞ் செய்துவிட. பரசுராமனைக் கருவபங்கஞ் செய்ததற்காக. “தானஞ் செய்த இடத்தில் வசிக்கலாமோ?” எனக் காசியபர் கேட்க. பரசுராமன் வருணன் அனுமதியுடன் சைய மலையிலிருந்து தன் கோடரிப்படையை வீச. அது விழுந்த இடம் வரையிலும் கடல் விலகிச் சென்றது. அவ்விடத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டவன் பரசுராமன் என்பது முன்னிரண்டடியில் உள்ள பொருள். இன்றும் கேரளம். “பரசுராம க்ஷேத்திரம்” என அம்மக்களால் வழங்கப்படுகிறது. பரசுராமன் பல கொடுமைகளைச் செய்திருந்தமையால். அவனைக் கண்ட தயரதன். “வெய்யன்” என்று துடித்தான் என்க. காசியப முனிவருக்குத் தானஞ் செய்துவிட்டு அந்நிலத்தில் இராத் தங்குவதில்லை என மலையில் சென்று தங்கி. ‘இனி அரசர்களைக் கொல்வதில்லை’ என்று தவமேற் கொண்ட பரசுராமன் இப்படி வெய்யனாய் வரக் காரணம் என்னவோ என்று தசரதன் திகைத்தான் என்க. 15 எதிரே வந்த பரசுராமனை. ‘யார்?’ என. இராமன் கேட்டல் |