யான். இற்று ஓடிய சிலையின் திறம் அறிவென்-நான். (முன்னமே நீ) முறித்து ஒழித்த வில்லின் திறத்தை (அது முன்பே முறிந்திருந்தது என்பதை) அறிவேன்; இனி உன் பொன் தோள்வலி நிலை - இப்பொழுது நான் உன்னுடைய அழகிய தோள் வலிமையின் நிலையை; சோதனை புரிவான் நசை உடையேன் - சோதித்து அறிய விருப்பம் சிறிது உடையேன்; செற்று - (அரசர்களை) அழித்து; ஓடிய - மேம்பட்ட; திரள் தோள் உறு தினவும் - திரண்ட தோள்களில் பொருந்தின தினவும் சிறிது எனக்கு உண்டு; இங்கு இது என் வரவு மற்று ஓர் பொருள் இ(ல்)லை - இங்கு எனது வருகைக்குக் காரணம் இதுவே வேறு ஒரு காரணமும் இல்லை என்று; உரவோன் என்றனன் - வலிமை மிக்க பரசுராமன் கூறினான். சிவ பெருமான் வில் முன்பே முறிந்தவில்;அதனை முறித்ததற்காகக் கர்வங் கொள்ளாதே எனக் குற்றம்கூறும் பரசுராமன் தான் மிகப்பெருங் கர்வத்தோடு பேசுகிறான்; கர்வங் கொள்பவர் தன் குற்றம் அறியார் என்பது குறித்தார். புரிவான் - பொருட்டுப்பொருளில் வந்த வினையெச்சம். உன் தோள் வலிவைச் சோதனையிடவும். என் தோள் தினவைச் சிறிது அடக்கிக் கொள்ளவும் ஆகிய இரு செயல்களுக்காகவே இங்கு வந்தேன்; வேறோர் காரியமில்லை என்கிறான் பரசுராமன். 18 பரசுராமனிடம் தயரதன் அபயம் வேண்டல் |