என - மின்னலினால் தளர்ச்சியுறும் கொடிய பாம்பு போன்று; வெய்துறல் உற்றான் - (மனம்) வெதும்புதல் அடைந்தான் (தசரதன்) என்னா. இகழா. விழியா. உணரா. நினையா. தளரா என்னும் செய்யா என்னும் எச்சங்கள் உடன்பாட்டுப் பொருளைத் தந்து உற்றான் எனும் வினை முடிபு கொண்டன. அடிவிழுவானையும் என்பதில் உள்ள உம்மை அடிவிழுவானைப் புறக்கணிக்கவும் ஒரு முனிவனால் எப்படி முடிந்தது எனும் வியப்புத் தோன்றுமாறு நின்றது. சம்பராசுரனை வென்ற தோளாற்றல் வாய்ந்த தசரதன். தவத்தின் ஆற்றலின் முன் ஒன்றும் செய்ய இயலாமல் தவித்தான் என்பது தோன்ற. “தன்னால் ஒரு செயலின்மையை நினையா” என்றார். மின்னலின் ஒளி பாம்புகளை மிகப் பாதிக்கும் என்பது மரபு. 24 |