வேரி அம்கமலத் தோனும் - நறுமணம் கொள்ளும் அழகிய தாமரை மலரில் வாழும் நான்முகனும்;‘தேவர் தங்கள் சிந்தனை சீரிது’ - ‘தேவர்களுடைய (இவ்வாராய்ச்சி) எண்ணம் சிறந்தது; என்பது உன்னி - என்பதை நினைத்து; இயைவது ஓர் வினயம் தன்னால் - பொருந்துகின்ற ஒரு தந்திரத்தினால்; யாரினும் உயர்ந்த மூலத்து - யாரினும் மேம்பட்ட காரணநிலையில்; ஒருவராம் இருவர்தம்மை - ஒருவராய்க் காரிய நிலையில் இருவரானவரையும் (சிவபிரானையும் திருமாலையும்); மூரி வெஞ்சிலை மேலிட்டு - வலிமை மிக்க இருவிற்களைக் காரணமாக வைத்து; மொய் அமர் மூட்டிவிட்டான் - வலிய போர் (ஒன்றைப்) புரியுமாறு தூண்டிவிட்டான். கம்பர் பெருமானின் கடவுட் கோட்பாடு தெளிவுற விளங்கும் இடங்களில் இப்பாடல் சிவந்தவற்றுள் சிறந்த ஒன்றாகும். ஒரே மூலப் பரம்பொருள். காரியப்படும்போது. அளிக்கும் செயலுக்குத் திருமால் எனவும். அழிக்கும் செயலுக்குச் சிவபெருமான் எனவும் பெயரளவில் இரண்டாக வேறுபடுகிறது. “மூன்று கவடாய் முளைத்தெழுந்த மூலம்” (கம்ப. 3682) என்பதனை இங்குத் தெளிவுபட |