இருவரும் - (அரி. அரன் என்னும்) இரண்டு பேரும்; இரண்டு வில்லும் ஏற்றினர் - இரு விற்களையும் நாணேற்றி; உலகம் ஏழும் வெருவர- ஏழுலகங்களும் அஞ்சுமாறு; திசைகள் பேர - திசைகள் நிலைகுலைய; வெங்கனல் பொங்க - கடிய சினத்தீ பொங்கியெழ; மேன்மேல் - மேலும் மேலும்; செருமலைகின்ற போழ்தில் - போர் புரிகின்ற; திரிபுரம் எரித்த தேவன் - முப்புரிமெரித்த சிவபெருமானின்; வரிசிலை இற்றது ஆக - கட்டமைந்த வில் முரிந்துபோக; மற்று. அவன் முனிந்து - அச் சிவபிரான் மிக்க சினங்கொண்டு. மன். ஓ - அசைநிலைகள். “முனிந்து மீட்டும் போர் தொடங்கும் வேலை” என மேற்பாடலோடு இயையும். மற்று - வினைமாற்றுப் பொருளில் வந்தது. 29 |