பக்கம் எண் :

824பால காண்டம்  


 
  

ஈட்டிய தவத்தின் மிக்க
   இரிசிகற்கு ஈந்து போனான்;
 

மீட்டும்    போர் - மீண்டும் போரானது; தொடங்கும் வேலை -
தொடங்கும் போது; விண்ணவர் விலக்க - தேவர்கள் (இடையே) வந்து
விலக்கிட;  நெற்றிக் கண்ணன் - நெற்றிக் கண்ணனாகிய சிவபெருமான்
(போர்  ஒழிந்து); வல்வில்  தேவர்  கோன் கை நீட்டினன் - (அந்த)
வலிய  வில்லைத்  தேவேந்திரனின்  கைகளில்  கொடுத்தான்;  வெற்றி
காட்டிய   கரியமாலும்   
-   வெற்றியைக்   காட்டி   நின்ற   கரிய
நிறத்திருமாலும்;  கார்முகம்  அதனை  -  (தன் கையிலிருந்த  ஒடியா)
வில்லாகிய அதனை; பாரில் ஈட்டிய தவத்தின் மிக்க - பூமியில் (தான்)
செய்து  சேர்த்த தவத்திற் சிறந்த; இரிசிகற்கு ஈந்து போனான் - (என்
தந்தையின்  தந்தையாகிய)   இரிசிக  முனிவரிடம்   அளித்து   விட்டுச்
சென்றான்.
   

வல்வில்:     வலிமை  மிக்க  வில்.   (முறிந்ததனால்)   இகழ்ச்சிக்
குறிப்புமாம்.  கீழே.  கார்முகப்  படலத்தில்.  இவ்வில்லைச்  சிவபிரான்
தக்கன்  வதத்திற்கு  எடுத்துச்  சென்று  வென்று  வந்ததாகக்  குறிப்பு
உள்ளது   (கம்ப.   677)   விசுவ   கர்மன்   செய்த   இருவில்களுள்
ஒன்றையெடுத்துச் சென்று. சிவபெருமான். தக்கனை  வென்றான்.  பிறகு
தேவர்  விரும்பியவாறு வலிமையறியச்  சிவபிரானுக்கும்  திருமாலுக்கும்
போர்   நடக்கையில்   சிவதனுசு   முறிந்ததால்.   அதனை   மிதிலை
மன்னனாகிய  தேவராதனுக்கு.   சிவபிரான்  தந்துவிட்டுச்   சென்றான்.
அது சனகன் கைக்கு வந்து என வில்லின்  வரலாற்றை  விரித்துணர்ந்து
கொள்க.    இரிசிகன்:    பரசுராமனின்    பாட்டன்.    பரசுராமனின்
தந்தையாகிய சமதக்கினியின் தந்தை.                           30
   

1293.‘இரிசிகன் எந்தைக்கு ஈய.
   எந்தையும் எனக்குத் தந்த
வரி சிலை இது. நீ நொய்தின்
   வாங்குதிஆயின். மைந்த!
குரிசில்கள் நின்னொடு ஒப்பார்
   இல்லை; யான் குறித்த போரும்
புரிகிலென். நின்னொடு; இன்னம்
   புகல்வது கேட்டி’ என்றான்.
 

இரிசிகன் எந்தைக்கு ஈய - இரிசிக முனிவன் (தன் மகனாகிய) என்
தந்தைக்கு அளித்திட; எந்தையும்  எனக்குத் தந்த வரிசிலை இது  -
என் தந்தையாகிய சம தக்கினி முனிவர் என்னிடம்  கொடுத்த   அழகிய
வில்  இது;  நீ நொய்தின் வாங்குதி ஆயின் - நீ (இதனை) எளிதாய்
(வளைத்திடுவாய்)  என்றால்;  மைந்த  -  வல்லமை வாய்ந்த   மகனே;
நின்னொடு  ஒப்பார்  குரிசில்கள்  இல்லை  
-  உனக்கு  ஒப்பாகும்
மன்னர்களே  (உலகில்) இல்லை (என்பேன்); நின்னொடு யான் குறித்த
போரும் புரிகிலென்
- உன்னோடு நான் புரியக் கருதி வந்த போரினை