னாகி; நாரணன் வலியின் ஆண்ட வென்றிவில் தருக என்ன - திருமால் வலிமையினால் எடுத்துப் பயின்ற வெற்றி வில்லைத் தருக என்று கூற; கொடுத்தனன் - (பரசுராமன் உடனே வில்லைக்) கொடுத்திட்டான்; வீரன் கொண்டு - வில்லை (இராமன்) வாங்கிக் கொண்டவனாய்; துன்று இருஞ்சடையோன் அஞ்ச - நெருங்கிப் பெருத்த சடையுடையோனாகிய பரசுராமன் அஞ்சுமாறு; தோளுற வாங்கிச் சொல்லும் - அவ்வில்லைத் தன் தோள்வரையில் வருமாறு வளைத்துக் கொண்டு கூறுவான். இராமன் திருமுகம் அழகியது. அது புன்னகை பூக்குங்கால் மேலும் பேரழகு பெறும் என்பார். “முறுவல் எய்தி நன்றுஒளிர் முகத்தன் ஆகி” என்றார். உள்ளிருந்த வீரம் முகத்தில் பொங்கியதால் நன்று ஒளிர்ந்தது முகம். நகை எள்ளல் அடியாகப் பிறந்தது. திருமால் கையாண்ட வில் தனக்கு வரவேண்டியதே தருக என்பார். “நாரணன் வலியின் ஆண்ட வென்றிவில்” என்றார். வென்றி வில் - என்றும் தோலாத வெற்றியையே யுடைய வில். 35 |