கருத்தை “என்றாலும்” என்பதில் உள்ள உம்மை குறித்து நின்றது. கொல்லாமல் விடுவதற்குக் காரணங்கள் இரண்டுள. வேத வித்தாய மேலோன் மைந்தன் நீ என்பது ஒன்று; தவ வேடம் பூண்டது மற்றொன்று என்கிறான் பெருமான். உனக்காக உன்னை நான் கொல்லாமல் விடவில்லை; உன் தந்தைக்காகவும் நீ பூண்டுள்ள வேடத்துக்காகவுமே உன்னை கொல்லாமல் விடுகிறேன் என்கிறான். வேடம் கூடப் போற்றத்தக்கது என்பதனை. “மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்” (பெரியபு. மெய்ப். 15) என்றமெய்ப்பொருள்நாயனார் வாழ்வு உணர்த்தும். “மால் அற நேயமும் மலிந்தவர் வேடமும். ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே” (சிவஞா. போ. 12) என்பார் மெய்கண்ட தேவரும். இராம பாணம் தொடங்கிய செயல் முடிக்காது மீளாது. வெறும் வாயோடு மீளும் வழக்கம் இல்லாதது எனும் மரபு பற்றி. “ அம்பு இது பிழைப்பது அன்று” என்றார். கொலைத் தொழிலில் சிறத்தல் தவமாதல் இல்லை யென்க. “உற்ற நோய் நோன்றல்” உயிர்க்கு உறுகண் செய்யாமை (திருக். 261) இரண்டுமே தவத்தின் அடையாளங்கள் என்பது வள்ளுவர் வாய்மொழி. 36 அம்புக்குத் தவத்தை இலக்கு ஆக்குதல் |