பக்கம் எண் :

  மிகைப் பாடல்கள்839

4.மாதுளங் கனியை. சோதி
   வயங்கு இரு நிதியை. வாசத்
தாது உகு நறு மென் செய்ய
   தாமரைத் துணை மென் போதை.
மோது பாற்கடலின் முன்நாள்.
   முளைத்த நால் கரத்தில் ஏந்தும்
போது தாயாகத் தோன்றும்
   பொன் அடி போற்றிசெய்வாம்.
 

மாதுளங்கனியை   - மாதுளங்கனி போன்ற நிறத்தினளை; சோதி -
ஒளி;  வயங்குதல்  - விளங்குதல்; நிதி - செல்வம்; தாது - மகரந்தம்;
உகு
- சிந்தும்; துணை - இரண்டு; போது - மலர்; தாய் - இலக்குமி.
  

5.பராவ அரு மறை பயில் பரமன். பங்கயக்
கராதலம் நிறைபயில் கருணைக் கண்ணினான்.
அரா - அணைத் துயில் துறந்து அயோத்தி மேவிய
இராகவன். மலர்அடி இறைஞ்சி ஏத்துவாம்.

 

பராவ அருமறை-போற்றுதற்கரிய வேதங்கள்; பங்கயம் - தாமரை;
கராதலம்
-  கைகள்;  அராவனை  -  பாம்புப்படுக்கை; இராகவன் -
இராமன்; இறைஞ்சி - வணங்கி.
  

6.கலங்கா மதியும். கதிரோன் புரவிப்
பொலன் கா மணித் தேரும். போகா இலங்கா
புரத்தானை. வானோர் புரத்து ஏறவிட்ட
சரத்தானை. நெஞ்வே! தரி.

 

கலங்கா-   கலங்காத;  மதி  -  சந்திரன்;  கதிரோன் - சூரியன்;
பொலன்
-  அழகிய; இலங்காபுரத்தான் - இராவணன்; சரம் - அம்பு;
சரத்தான்
- இராமன்; தரி - தரிக்கச் செய்:
  

7.‘நாராயணாய நம!’ என்னும் நல் நெஞ்சர்
பார் ஆளும் பாதம் பணிந்து. ஏத்துமாறு அறியேன்;
கார் ஆரும் மேனிக் கருணாகர மூர்த்திக்கு
ஆராதனை என் அறியாமை ஒன்றுமே.

 

நல்     நெஞ்சர்- நல்ல  மனமுடைய  சான்றோர்; ஏத்துமாறு -
போற்றும்  வகை; கார் - மேகம்; கருணாகரன் - கருணை  வடிவினன்;
மூர்த்தி
- வடிவம்; ஆராதனை - நிவேதனம்.