| 8. | பராவரும் இராமன். மாதோடு இளவள் பின் படரக் கான் போய். விராதனை. கரனை. மானை. கவந்தனை. வென்றிகொண்டு. மராமரம். வாலி மார்பு. துளைத்து. அணை வகுத்து. பின்னர். இராவணன் குலமும் பொன்ற எய்து. உடன் அயோத்தி வந்தான். |
பராவரும் - துதிப்பதற்கு அரிய; மாது - சீதை; இளவல் - இலக்குவன்; பின்படர - பின்தொடர்ந்து வர; கான் - காடு; துளைத்து - துளைசெய்து; அணை வகுத்து - அணை அமைத்து; பொன்ற - அழிய; எய்து - அம்பெய்து. |
| 9. | தருகை நீண்ட தயரதன்தான் தரும் இரு கை வேழத்து இராகவன்தன் கதை திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட. குருகை நாதன் குரை கழல் காப்பதே. |
தருகை - தருகின்ற கை (வினைத் தொகை) ; வேழம் - யானை; திருகை வேலை - சூழ்ந்துள்ள கடல்; குருகைநாதன் - திருக்குருகை நாதனான நம்மாழ்வார்; குரை - ஒலிக்கும்; கழல் - பாதங்கள்; காப்பதே - காக்குமாக. |
| 10. | அஞ்சிலே ஒன்று பெற்றான். அஞ்சிலே ஒன்றைத் தாவி. அஞ்சிலே ஒன்று ஆறு ஆக. ஆர் உயிர் காக்க ஏகி. அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு. அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான். அவன் எம்மை அளித்துக் காப்பான். |
அஞ்சிலே ஒன்று - காற்று; அஞ்சிலே ஒன்றை - கடலை; அஞ்சிலே ஒன்று ஆறு ஆக - வான் வழியாக; ஆருயிர் - சீதாபிராட்டியின் உயிர்; அஞ்சிலே ஒன்று பெற்ற - நிலமகள் பெற்ற; அணங்கு - சீதை; அயலார் - பகைவர்; அஞ்சிலே ஒன்று - நெருப்பு. |
| 11. | எவ் இடத்தும். இராமன் சரிதை ஆம் அவ் இடத்திலும். அஞ்சலி அத்தனாய். |