| பவ்வ மிக்க புகழ்த் திருப் பாற்கடல் தெய்வ தாசனைச் சிந்தை செய்வாம்அரோ. |
சரிதை- கதை; அஞ்சலி அத்தம் - கூப்பிய கை (அத்தம் - கை) ; பவ்வமிக்க புகழ் - கடல் போல் திரண்ட புகழ்; தெய்வ தாசன் - தெய்வத்தின் தொண்டன் (இங்கு அனுமன்). |
| 12. | பொத்தகம். படிகமாலை. குண்டிகை. பொருள் சேர் ஞான வித்தகம் தரித்த செங் கை விமலையை. அமலைதன்னை. மொய்த்த கொந்து அளக பார முகிழ் முலைத் தவள மேனி மைத் தகு கருங் கண் செவ் வாய் அணங்கினை. வணங்கல் செய்வாம். |
பொத்தகம் - ஏட்டுச்சுவடி; படிகமாலை - வெண் பளிங்கு மாலை; குண்டிகை - கமண்டலம்; ஞான வித்தகம் - ஞானமுத்திரை; விமலை - குற்றமற்றவள் (கலைமகள்); கொந்து - கொத்து; அளக பாரம் - கூந்தல்; தவளமேனி - வெண்மைநிறமான உடம்பு; மைத்தரு - மை போன்ற; அணங்கு - தெய்வ மகள். |
| 13. | தழை செவி. சிறு கண். தாழ் கைத் தந்த சிந்துரமும். தாரை மழை மதத் தறுகண் சித்ர வாரண முகத்து வாழ்பவை. இழைஇடைக் கலசக் கொங்கை இமகிரி மடந்தை ஈன்ற குழவியைத் தொழுவன். அன்பால் - ‘குறைவு அற நிறைக’ என்றே. |
தழை செவி- தழைத்த காது; சிறுகண் - சிறியகண்; தாழ்கை - நீண்டகை; தாரை மழை மதம் - மழைத்தாரையாய்ப் பொழியும் மதநீர்; தறுகண் - வலிமை; சித்ரவாரணம் - அழகிய யானை; இழை - நூல்; கலசம் - குடம்; இமகிரிமடந்தை - இமயமலை யரசன் மகள்; குழவி - குழந்தை (விநாயகன்); தொழுவன் - வணங்குவேன்; குறைவு அற - குறைகள் நீங்க; நிறைக - நன்மை நிறைய. |
| 14. | எக் கணக்கும் இறந்த பெருமையன். பொக்கணத்தன். புலி அதள் ஆடையன். |