பக்கம் எண் :

842பால காண்டம்  


 

முக்கண் அத்தன். வரம் பெற்ற மூப்பனை.
அக் கணத்தின் அவன் அடி தாழ்ந்தனம்.
 

எக்கணக்கும்    - எந்தக் கணக்கையும்; பொக்கணம் - ஒரு வகைப்
பை; புலிஅதள் - புலித் தோல்; முக்கண் அத்தன் - முக்கண் மூர்த்தி
(சிவபெருமான்);  அப்பன்  -  தலைவன்;  அக்கணத்தின்  - அந்தக்
கணத்திலே.
  

                                               தனியன்
 

15.நாரணன் விளையாட்டு எல்லாம்
   நாரத முனிவன் கூற.
ஆரணக் கவிதை செய்தான்.
   அறிந்த வான்மீகி என்பான்;
சீர் அணி சோழ நாட்டுத்
   திருவழுந்தூருள் வாழ்வோன்.
கார் அணி கொடையான். கம்பன்.
   தமிழினால் கவிதை செய்தான்.
 

நாரணன் விளையாட்டு- திருமாலின் திருவிளையாடல்; ஆரணம் -
வேதம்;   சீர்அணி   -  சிறப்புடைய;  திருவழுந்தூர்-  தேரழுந்தூர்;
கார்அணி
- மேகம் போன்ற; கொடை - ஈகை; கவிதை - செய்யுள்.
  

16.அம்பிலே சிலையை நாட்டி
   அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த
தம்பிரான் என்ன. தானும்
   தமிழிலே தாலை நாட்டி.
கம்ப நாடு உடைய வள்ளல்.
   கவிச் சக்ரவர்த்தி. பார்மேல்
நம்பு பாமாலையாலே
   நரர்க்கும் இன் அமுதம் ஈந்தான்.

 

அம்பு  -   தண்ணீர்  (இங்குப் பாற்கடல்); சிலை - மலை  (மந்தர
மலை);  அமரர் -  தேவர்கள்; அமுதம் ஈந்த தம்பிரான் - திருமால்;
தால்
- நாவு; நரர்க்கு - மானிடர்களுக்கு; ஈந்தான் - தந்தான்.
  

17.வாழ்வு ஆர்தரு வெண்ணெய் நல்லூர்ச்
   சடையப்பன் வாழ்த்துப் பெற.
தாழ்வார் உயர. புலவோர்
   அகஇருள் தான் அகல