பக்கம் எண் :

  மிகைப் பாடல்கள்843

போழ் வார் கதிரின் உதித்த
   தெய்வப் புலமைக் கம்ப நாட்டு
ஆழ்வார் பதத்தைச் சிந்திப்பவர்க்கு
   யாதும் அரியது அன்றே.
 

வாழ்வு ஆர்தரு- நல்வாழ்வு பொருந்திய;அகஇருள் - உள்  இருள்
(அகம் - மனம்); அகல - நீங்க; போழ்வார் கதிர் - காலத்தில் மிக்குப்
பொலியும்  பரிதி; சிந்திப்பவர்க்கு  - நினைப்பவர்களுக்கு; அரியது -
செய்தற்கரியசெயல்.
  

18.அம்பு அரா அணி சடை அரன் அயன் முதல்
உம்பரால். முனிவரால். யோகரால். உயர்
இம்பரால். பிணிக்க அரும் இராம வேழம் சேர்
கம்பர் ஆம் புலவரைக் கருத்து இருத்துவாம்.

 

அம்பு- நீர் (கங்கை); அரா - பாம்பு; அணி - அணிந்த; உம்பர் -
தேவர்; இம்பர்  -  இவ்வுலகத்தோர்;  பிணிக்க -  கட்ட;  வேழம் -
யானை; கருத்து - உள்ளத்தில்; இருத்துவாம் - இருக்கச் செய்வோம்.
  

19.சம்பு. அ(ந்)நாள். தன் உமை செவி சாற்று பூங்
கொம்பு அனாள்தன் கொழுநன் இராமப் பேர்
பம்ப நாள் தழைக்கும் கதை பாச் செய்த
கம்பநாடன் கழல் தலையில் கொள்வாம்.

 

சம்பு   -   சிவபிரான்;  உமைசெவி  - உமாதேவியின் காதுகளில்;
பூங்கொம்பு அன்னாள்  
-  மலர்க்   கொம்பு  போன்றவள்  (சீதை) ;
கொழுநன்  
-  கணவன்; பாச்செய்த  -  பாக்களால்  செய்த; பம்ப -
பொலிய.
  

20.இம்பரும் உம்பர்தாமும்
   ஏத்திய இராம காதை
தம்பமா முத்தி சேர்தல்
   சத்தியம் சத்தியம்மே;
அம்பரம் தன்னில் மேவும்
   ஆதித்தன் புதல்வன் ஞானக்
கம்பன் செங் கமல பாதம்
   கருத்துற இருத்துவாமே.
 

இம்பர் - இவ்வுலகத்தோர்; உம்பர் - விண்ணுலகத்தோர்; ஏத்திய -
போற்றிய; தம்பம் - பற்றுக்கோடு; ஞானக் கம்பன் -