பக்கம் எண் :

844பால காண்டம்  

ஞானத்தை    உடைய கம்பன்; செங்கமலம் - செந்தாமரை;  கருத்துற
-  உள்ளத்தில்  பொருந்தி  நிற்க; ஆதித்தன் - கம்பனது  தந்தையின்
பெயர் என்பர்.
  

21.ஆதவன் புதல்வன். முத்தி
   அறிவினை அளிக்கும் ஐயன்.
போதவன் இராம காதை
   புகன்றருள் புனிதன். மண்மேல்
கோது அவம் சற்றும் இல்லான்.
   கொண்டல் மால்தன்னை ஒப்பான்.
மா தவன் கம்பன் செம் பொன்
   மலர்அடி தொழுது வாழ்வாம்.

 

ஐயன்  - தலைவன்; அளிக்கும் - கொடுக்கும்; போதவன் - அறிவு
மிக்கவன்;  புகன்று  -  கூறி;  புனிதன்  -  தூய்மையாளன்; கோது -
குற்றம்;  அவம்  -  வீணான;  கொண்டல்மால்  -  மேகம்  போன்ற
திருமால்; செம்பொன் - செம்மையானபொன்.
  

22.ஆவின் கொடைச் சகரர் ஆயிரத்து நூறு ஒழித்து.
தேவன் திருவழுந்தூர் நல் நாட்டு
- மூவலூர்ச்
சீர் ஆர் குணாதித்தன் சேய் அமையப் பாடினான்
கார் ஆர் காகுத்தன் கதை.

 

ஆவின்    கொடை  -   ஆக்களைக்   கொடையாக   அளித்த;
திருவழுந்தூர் நல் நாட்டு மூவலூர்
- திருவழுந்தூர் நாட்டைச் சேர்ந்த
மூவலூர்;  குண ஆதித்தன் - நல்ல குணம் உள்ள ஆதித்தன்; சேய் -
பிள்ளை; கார்ஆர் - மேகம் போன்று நிறம்; காகுத்தன் - இராமன்.
  

23.எண்ணி சகாத்தம் எண்ணூற்று
   ஏழின்மேல். சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய் நல்லூர்
   தன்னிலே கம்பநாடன்
பண்ணிய இராம காதை
   பங்குனி அத்த நாளில்.
கண்ணிய அரங்கர் முன்னே.
   கவி அரங்கேற்றினானே.
 
 

சகாத்தம் -  சாலிவாகன சகாப்தம் (807) ; பங்குனி அத்த நாள் -
பங்குனி  மாதம்  அஸ்தம  நட்சத்திரத்தன்று;  அரங்கர்  முன்னே  -
திருவரங்கப்  பெருமான்  முன்பு;  அரங்கேறினான்  -  அரங்கேற்றம்
செய்தான்.