| 24. | கழுந்தராய் உன கழல் பணியாதவர் கதிர்மணி முடிமீதே அழுந்த வாளிகள் தொடு சிலை இராகவ! அபிநவ கவிநாதன் விழுந்த நாயிறுஅது எழுவதன்முன். மறை வேதியருடன் ஆராய்ந்து. எழுந்த நாயிறு விழுவதன்முன் கவி பாடியது எழுநூறே. |
கழுந்தராய் - கழுந்து போன்றவராய் (கழுந்து - உலக்கை); உன கழல் - உனது பாதங்களை; வாளி - அம்பு; தொடு - எய்த; சிலை - வில்; அபிநவம் - புதுமை; கவிநாதள் - கவிஞர்தலைவன்; நாயிறு - சூரியன். |
| 25. | கரை செறி காண்டம் ஏழு. கதைகள் ஆயிரத்து எண்ணூறு. பரவுறு சமரம் பத்து. படலம் நூற்றிருபத்தெட்டே; உரைசெயும் விருத்தம் பன்னீ ராயிரத்து ஒருபத்தாறு; வரம் மிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணூற்றாறே. |
காண்டம் எழு ;கதைகள் ஆயிரத்து எண்ணூறு;போர்கள் பத்து; படலம் நூற்று இருபத்தெட்டு; வண்ணம் (சந்தம்) தொண்ணூற்று ஆறு; வரம் மிகு கம்பன் - வரபலம் மிகுந்த கம்பன். |
| 26. | தராதலத்தின் உள்ள தமிழ்க் குற்றம் எல்லாம் அராவும் அரம் ஆயிற்று அன்றே -இராவணன்மேல் அம்பு நாட்டு ஆழ்வான் அடி பணியும் ஆதித்தன் கம்ப நாட்டு ஆழ்வான் கவி. |
தராதலம்- உலகம்;அரம் - இரும்பை ராவும் கருவி; அம்பு நாட்டு ஆழ்வான் - அம்பை நாட்டி ஆழ்த்தியவன் (இராமன்); கம்ப நாட்டாழ்வான் - கம்பன். |
| 27. | இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம் எய்தி. அரசு ஆண்டு இருந்தாலும். |