| உம்பர் நாட்டில் கற்பகக் கா ஓங்கும் நீழல் இருந்தாலும். செம்பொன்மேரு அனைய புயத் திறல் சேர் இராமன் திருக் கதையில் கம்பநாடன் கவிதையில்போல். கற்றோர்க்கு இதயம் களியாதே. |
இம்பர் நாட்டின் - இவ்வுலகத்தின்; எய்தி- அடைந்து; அரசாண்டு - ஆட்சி செய்து; உம்பர் நாட்டின் - விண்ணுலகத்தின்; கற்பகக் கா - கற்பகச் சோலை; நீழல் - நிழல்; மேரு அனைய - மேரு மலை போன்ற; புயம் - தோள்; திறல் - வலிமை; கவிதை - பாடல்; இதயம் - மனம்; களியாது - மகிழாது. |
| 28. | நாரதன் கருப்பஞ் சாறாய். நல்ல வான்மீகன் பாகாய். சீர் அணி போதன் வட்டாய். செய்தனன்; காளிதாசன். பார் அமுது அருந்தப் பஞ்ச - தாரையாய்ச் செய்தான்; கம்பன். வாரம் ஆம் இராமகாதை வளம் முறை திருத்தினானே. |
கருப்பஞ்சாறு - கரும்புச் சாறு; பாகு - சக்கரைப் பாகு; வட்டு - வெல்லக்கட்டி; பஞ்சதாரை - சர்க்கரை; பார் அமுது அருந்த - உலகம் அமுதாக உண்ண; வாரம் - அன்பு. |
| 29. | நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே; தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே; சென்மமும் மரணமும் இன்றித் தீருமே- இம்மையே இ‘ராம’ என்று இரண்டு எழுத்தினால். |
நல்கும்- வழங்கும்; தின்மை - தீமை; தேயும் - தேய்ந்து போகும்; சென்மம் - பிறப்பு;மரணம் - இறப்பு; இன்றி - இல்லாது; இம்மையே - இவ்வுலகிலேயே; |
| 30. | ஓர் ஆயிரம் மகம் புரி பயனை உய்க்குமே; நராதிபர் செல்வமும் புகழும் நல்குமே. விராய் எணும் பவங்களை வேர் அறுக்குமே- ‘இராம’ என்று ஒரு மொழி இயம்பும்காலையே. |